தமிழ்த் திரைப்படத்துறையின் நலன் கருதி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர்.ஜி.கே.எம்.தமிழ்குமரன் தலைமையில், செயலாளர்கள் .எஸ்.கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் .கமலக்கண்ணன், இணைச்செயலாளர் .சுஜாதா விஜயக்குமார், பொருளாளர் .என்.சுபாஷ் சந்திர போஸ் மற்றும் முன்னாள் தலைவர் கேயார், தமிழத் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.ஜி.தியாகராஜன், செயலாளர் .டி.சிவா, பொருளாளர் தனஞ்செயன் தயாரிப்பாளர்கள் .ஆர்.பி.சௌத்ரி, .ஐசரி கணேஷ்,.சந்திரபிரகாஷ் ஜெயின்,.ஏ.எல்.அழகப்பன், .பிரமிட் நடராஜன், .ஏ.எம். ரத்னம், முகேஷ் மேத்தா மற்றும் தமிழ்நாடு திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், செயலளார் ரோகினி பன்னீர்செல்வம், மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் .அருள்பதி, மற்றும் நிர்வாகிகள் மற்றும் திரையுலகை சார்ந்த பலரும் கலந்துகொண்ட கலந்துரையாடல் கூட்டம் இன்று 14.03.2026 சனிக்கிழமை காலை 11 மணி அளவில் சென்னை தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், திரைத்துறையின் நலன் கருதி பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது அதில் குறிப்பாக, திரைப்படங்கள் வெளியீட்டிற்கும், OTT வெளியீட்டை முறைப்படுத்துவதற்கு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அடங்கிய கூட்டுக்குழு (Joint Action Committee) அமைப்பது என்றும், இந்த கூட்டுக்குழு எடுக்கும் முடிவிற்கு திரைத்துறையினர் கட்டுபட வேண்டும் என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரு நடிகர், நடிகையர், இயக்குனர், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் எந்த ஒரு தயாரிப்பாளரிடம் முதலில் அட்வான்ஸ் வாங்குகிறார்களோ அந்த தயாரிப்பாளருக்கு முன்னுரிமை கொடுத்து திரைப்படத்தினை முடித்துத் தர வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திரைப்படங்களில் நடிக்கும் நடிகர், நடிகையர், இயக்குனர், முன்னனி தொழில்நுட்ப கலைஞர்கள், இணையதள தொடர்களில் நடிக்கவோ, இயக்கம் செய்யவோ செல்லக் கூடாது. அவ்வாறு செல்லும் நடிகர், நடிகையர், முன்னனி தொழில்நுட்ப கலைஞர்கள் திரைப்படங்களில் பணிபுரிய கூட்டுக்குழு எடுக்கும் முடிவிற்கு ஏகமனதாக தீர்மானம் கட்டுபட வேண்டும் என நிறைவேற்றப்பட்டுள்ளது.












