Tuesday, September 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘நீளிரா’ –  விமர்சனம்!

admin by admin
April 4, 2026
in Reviews
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சோமீதரன் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் நீளிரா. இதில் நவீன் சந்திரா, சனத், கபிலா வேணு, ரூபா கொடுவாயூர், விது , கஜராஜ் , சித்து குமரேசன், நவயுகா, சுவாதி கிருஷ்ணன் , நமசிவாயம் தம்பி பிள்ளை, கயல் வின்சென்ட் , ரோஹித் கொகாடே ஆகியோர் நடித்துள்ளனர். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்க, கே. இசையமைத்துள்ளார்.

1988 ஆம் ஆண்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) படையினருக்கும், இந்திய அமைதி காக்கும் படை (IPKF) படையினருக்கும் இடையே போரின் போது நடந்த, ஒரு சம்பவமே திரைப்படமாக உருவாகியிருக்கிறது. அதாவது, போர் பதற்ற சூழ்நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஊரில் விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில், தங்களது சோகங்களை மறைத்து கல்யாணத்திற்கான வேலைகளை செய்து வருகின்றனர்.

You might also like

‘பீப்’ – விமர்சனம்!

‘சண்டக்காரி’ – விமர்சனம்!

‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!

இதற்கிடையே விடுதலைப் புலிகளை அழிக்க, சிறு சிறு குழுக்களாக, இந்திய அமைதி காக்கும் படையைச்சேர்ந்த பல குழுக்கள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைகின்றனர். அப்படி நுழைந்த குழுக்களில் ஒரு சிறிய குழு,  தவறுதலான ஒரு இடத்தில் முகாமிடுகிறது. இதன் காரணமாக, அவர்கள் முகாமிட்ட இடத்தின் அருகே உள்ளே கல்யாண வீட்டிற்குள் பதுங்கிக்கொள்கின்றனர். இது, விடுதலைப்புலிகளுக்கு தெரிய வருகிறது.  அதனால், வீட்டினை அவர்கள்  முற்றுகையிடுகின்றனர். கல்யாண வீட்டினரின் சந்தோஷம் காணாமல் போகிறது. திட்டமிட்டபடி கல்யாணம் நடந்ததா? என்பதுதான்,  ‘நீளிரா’ படத்தின் மீதிக் கதை.

இந்திய அமைதிப்படையினைச் சேர்ந்த  கேப்டனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, ஓகேவான நடிப்பினை கொடுத்திருக்கிறார். விடுதலைப்புலிகளின் படைப்பிரிவின் கேப்டனாக நடித்திருக்கும் சனத், அவர்களது தோற்றத்தினையும்  பாவனையினையும் அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார்.

ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, விது, சித்து குமரேசன், நவயுக, சுவாதி கிருஷ்ணன் ஆகியோர் கல்யாண வீட்டில், அமைத்திப்படையினரின் கட்டுப்பாட்டில் சிக்கித்தவிப்பவர்களாக நடித்து, தமிழீழப் பெண்களின் த்யரங்களை அப்படியே வெளிப்படுத்துகிறார்கள். நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்செண்ட், ரோஹித் கொகாடே ஆகியோர் திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபனின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. கே’ வின் இசையும் காட்சிகளுக்கேற்றபடி அமைந்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் சோமீதரன், ஒரு இரவில் நடக்கும் கதையில், ஈழப் போரின் முழு வரலாற்றையும் பேச முயற்சித்திருக்கிறார், அது முடியவில்லை. இப்போது நினைத்தாலும் நடுங்க வைக்கும் பல சம்பவங்களை, அலுத்தமில்லாத காட்சிகளால் படமாக்கியிருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே படபடப்பு ஏற்படுகிறது. குறிப்பாக,  ‘புலன் விசாரணை’ திரைப்பட கேசட்டின் நடுவே விடுதலைப்புலிகளின் தலைவர் பேசும் காட்சிகள் கொண்ட கேசட்டை ராணுவத்தினர் சோதனை செய்யும் காட்சியியைச் சொல்லலாம்.

இயக்குநர் சோமீதரன், பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு படமாக்கியிருப்பது நன்கு தெரிகிறது.

‘நீளிரா’ – முழுமையற்ற படைப்பு!

admin

admin

Related Posts

‘பீப்’ – விமர்சனம்!
Reviews

‘பீப்’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘சண்டக்காரி’ – விமர்சனம்!
Reviews

‘சண்டக்காரி’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!
Reviews

‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!

by admin
September 20, 2026
‘பாரிஸ் கஃபே’ – விமர்சனம்!
Reviews

‘பாரிஸ் கஃபே’ – விமர்சனம்!

by admin
September 19, 2026
சீட்டின் நுனியில் உட்கார வைக்கும், (விமர்சனம்) ‘தி டார்க் ஹெவன்’.
Reviews

சீட்டின் நுனியில் உட்கார வைக்கும், (விமர்சனம்) ‘தி டார்க் ஹெவன்’.

by admin
September 19, 2026

Recent News

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

September 21, 2026
பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

September 21, 2026
‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!

‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!

September 21, 2026
ரூ, 46 கோடி மோசடி :  நடிகை ராதா,அம்பிகா  மாறி  மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

ரூ, 46 கோடி மோசடி : நடிகை ராதா,அம்பிகா மாறி மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

September 21, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?