Tuesday, April 21, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘லீடர்’ – (விமர்சனம்.) வசப்படுத்துகிறார்!

admin by admin
April 4, 2026
in Reviews
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ புரொடக்ஷன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து, நடித்துள்ள இத்திரைப்படத்தில் அவருடன், ஷாம், ஆண்ட்ரியா ஜெர்மையா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புட், லால், பாகுபலி பிரபாகரன், அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், இயல், ஐஸ்வர்யா பாஸ்கரன் , ஜார்ஜ் மரியான், அறந்தாங்கி நிஷா, படவா கோபி, ஆதித்யா கதிர், ஜெயஸ்மித்ரா, ஷர்மிதா சாம், யோகிராம், ஓஏகே சுந்தர், மகாநதி சங்கர் , வேல் அருணாச்சலம், நிரஞ்சன் மோசஸ் , ஷோபன் பாபு , அசோக் பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தனுஷ், சிவகார்த்திகேயன் நடித்த வெற்றிப்படங்களை இயக்கிய, இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில் குமார் எழுதி இயக்கியுள்ளார். வெங்கடேஷ். எஸ் ஒளிப்பதிவு செய்திருக்க, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

You might also like

‘மிஸ்டர் எக்ஸ்’ – விமர்சனம்!

‘ரூம் பாய்’ – விமர்சனம்!

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கப்பழம் (விடிவி கணேஷ்) நடத்தி வரும் கார் மெக்கானிக் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வருபவர், சக்திவேல் (லெஜண்ட் சரவணன்). தனது ஒரே மகளுடன் வாழ்ந்து வருகிறார். மகளுக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர். தூத்துக்குடி ஹார்பரை தனது கைக்குள் வைத்திருக்கும் டெவிலின் (சந்தோஷ் பிரதாப்), கையாள் சால்ட் (பாகுபலி பிரபாகரன்). சக்திவேல், சால்ட்டிடம் இருக்கும் பல கார்களை சர்வீஸ் செய்து கொடுத்து வருவதால், ஹார்பருக்குள் அவர் எப்போது வேண்டுமானாலும் சென்று வரும் அளவிற்கு அங்கே பிரபலமாக இருக்கிறார்.

ஹார்பரில், சால்ட் செய்து வரும் சட்டவிரோதமான செயல்களை கவனித்து வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா, எப்படியாவது கைது செய்ய முயற்சித்து வருகிறார். இதனால், ஹார்பருக்குள் சுலபமாக அடிக்கடி சென்றுவரும் சக்திவேலின் மகளை, அவருக்கு தெரியாமல் கடத்தி, மிகப்பெரிய அளவில் பதுக்கி வைக்கப்பட்ட வெடி மருந்தை போலீஸ் கைப்பற்றுகிறது. சக்திவேலின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கும் போலீஸ் டிஎஸ்பி சாம், அவர் மேல் சந்தேகம் கொள்கிறார். அவரை, நெருங்க… நெருங்க….  சக்திவேலின் திடிக்கிடும் திட்டங்களும், அவரைப்பற்றிய உண்மைகளும் வெளிவருகிறது. அவை என்ன? என்பதை யூகிக்க முடியாத திருப்பங்களுடன், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் சொல்லியிருக்கிறார், இயக்குநர் இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில் குமார்.

முதல் படத்தில் இருந்த குறைகளை, தனது இரண்டாவது படமான லீடரில் தவிர்த்திருக்கிறார், நாயகனாக நடித்திருக்கும் லெஜண்ட் சரவணன். அப்பாவி சக்திவேலாக அறிமுகமாகும் அவர், பொன்மாறன் என்ற கதாபாத்திரத்தில் சாகசம் செய்கிறார். அவர் விரிக்கும் வலையில் ஒவ்வொருவராக சிக்கும் காட்சிகளும், அதிரடியான சண்டைக்காட்சிகளாலும் நடித்து, ஆக்‌ஷன் ஹீரோவாக தன்னை அலுத்தமாக பதிவு செய்து கொள்கிறார். மனைவியுடன் கொஞ்சும் காட்சிகளிலும், குழந்தையுடன் விளையாடும் காட்சிகளிலும், சொந்த மகளே தன்னை ‘அங்கிள்’ என அழைக்கும்போது அவர் காட்டும் பாவனைகள், நடிப்பில் அவரது முன்னேற்றத்தை காட்டுவதாக அமைந்திருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராஜ்புத், உக்கிய பங்கு பெறுவதுடன் நன்றாகவும் நடித்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆண்ட்ரியா ஜெர்மையா, போலீஸ் டிஎஸ்பி யாகநடித்திருக்கும் ஷாம், லால், முதன்மை வில்லனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், பாகுபலி பிரபாகரன்,  விடிவி கணேஷ், அமிர்தா ஐயர், சிறுமி இயல் என அனைவரது கதாபாத்திரங்களும், ரசிக்கும்படியும், சுவாரஸ்யமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குள்ளும் மர்மம்.

ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்.எஸ், அனைத்து காட்சிகளையும் ரசனையுடன் படம் பிடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளை அவர் படமாக்கிய விதம் பிரமிப்பினை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ட்ரெயினில் நடைபெறும் சண்டைக்காட்சி உலகத்தரத்தில் அமைந்திருக்கிறது.

காட்சிகளுக்கேற்ற ஜிப்ரானின் பின்னணி இசையும், பாடல்களும் தரமாக இருக்கிறது. காட்சிகளை மேம்படுத்துகிறது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில், செவிகளை சேதப்படுத்தவில்லை!

படத்தொகுப்பாளர், பிரதீப் ஈ.ராகவின் பணி படத்திற்கு பெரும் பலம். கதாபாத்திரங்களின் இன்னொரு பக்கத்தை குழப்பமில்லாமல் காட்டியிருக்கிறார். அதிலும் சந்தோஷ் பிரதாப்பின் கதாபாத்திரத்தை காட்டிய விதம், சபாஷ் போட வைக்கிறது. மேலும் படத்தை பரபரப்பாக நகர்த்திய விதமும் சிறப்பு.

இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில் குமார், லெஜண்ட் சரவணனின் கதாபாத்திரம் உட்பட அனைத்து கதாபாத்திரங்களையும் வடிவமைத்த விதம் சூப்பர். ஒரு ஹீரோவை எப்படி முன்னிறுத்த வேண்டுமோ, அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சிறப்பாக செய்திருக்கிறார். க்ளைமாக்ஸ் வரை, படத்தில் ஏகப்பட்ட டிவிஸ்ட்.பரபரப்பான ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், காதல், பாசம், அப்பா – மகள் செண்டிமெண்ட் என அனைத்து தரப்பினரும் பார்க்கும் வண்ணமாக அமைந்திருக்கிறது, லீடர்!

‘லீடர்’  –  வசப்படுத்துகிறார்!

admin

admin

Related Posts

‘மிஸ்டர் எக்ஸ்’ – விமர்சனம்!
Reviews

‘மிஸ்டர் எக்ஸ்’ – விமர்சனம்!

by admin
April 17, 2026
‘ரூம் பாய்’ – விமர்சனம்!
Reviews

‘ரூம் பாய்’ – விமர்சனம்!

by admin
April 17, 2026
ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.
Reviews

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

by admin
April 13, 2026
‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?
Reviews

‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?

by admin
April 12, 2026
‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!
Reviews

‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!

by admin
April 11, 2026

Recent News

அஜித்குமாரின்  ‘அமர்க்களம்’  ஏப்ரல் 24 -ல் மறுவெளியீடு !

அஜித்குமாரின் ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 -ல் மறுவெளியீடு !

April 20, 2026
இன்று கோலாகலமாக பூஜையுடன் தொடங்கிய “பீட்சா பாய்ஸ்” படம்!

கதையின் நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் !

April 20, 2026
இன்று கோலாகலமாக பூஜையுடன் தொடங்கிய “பீட்சா பாய்ஸ்” படம்!

இன்று கோலாகலமாக பூஜையுடன் தொடங்கிய “பீட்சா பாய்ஸ்” படம்!

April 20, 2026
‘கர’ படத்தில் தனுஷ் செய்த மேஜிக் ! -இயக்குனர் விக்னேஷ் ராஜா,

‘கர’ படத்தில் தனுஷ் செய்த மேஜிக் ! -இயக்குனர் விக்னேஷ் ராஜா,

April 20, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?