கதாநாயகனாக களமிறங்கிய ‘ஊராட்சி மன்ற தலைவர்’ !
தன் ஊரில் கல்யாண வயதில் உள்ள பெண் காணவில்லை என ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் வருகிறது. தலைவரான அழகுமலை அதிர்ச்சி அடைகிறார். விடிவதற்குள் அந்த பெண்ணை கண்டுபிடித்து ஒப்படைக்கிறேன் என அந்த பெண்ணின் தந்தையிடம் கூறிவிட்டு, தனது ஆட்களுடன் காரில் கிளம்புகிறார். தேடும் பொழுது அழகு மலைக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வருகிறது. அந்த பெண்ணை அழகுமலை கண்டுபிடித்தாரா? அந்த திடுக்கிடும் தகவலால் என்ன நடந்தது? என்பதற்கு விடைதாங்கி விரைவில் வரும் படம்தான் ஆர்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் ” பருந்து “.கதையின் நாயகனாக அழகுமலை நடித்து , கதை, திரைக்கதை, வசனம், மூன்று பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்துள்ள ” பருந்து ” படத்தில் , வாழ்க்கை தத்துவத்தை வடிவமைத்து அழகுமலை எழுதி உள்ள பாடல் ஒன்றை கங்கை அமரன் மிக உருக்கமாக பாடியுள்ளார்.
Related Posts
வி. ஆர். விநாயக், மன்சூர் அலி கான், அப்புக்குட்டி, சென்றாயன், ஆதித்யா, ஷர்மிசா, அமனா, சுமதி, ஷர்மிளா, ஐஸ்வர்யா, மாரிமுத்து ஆகியோருடன் இயக்குனர் பேரரசு வக்கீலாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.காசிவிசுவநாதன் ஒளிப்பதிவையும், வசந்தகுமார் டைரக்சன் மேற்பார்வையையும், ஜோன்ஸ் ரூபர்ட் இசையையும், ஜெயகிருஷ்னா படத்தொகுப்பையும், சின்னையா கலையையும், எஸ்.ஆர். முருகன் சண்டை பயிற்சியையும், அசோக்ராஜன் நடன பயிற்சியையும், நரசிம்மன் தயாரிப்பு மேற்பார்வையையும் கவனித்துள்ளனர். கங்கை அமரன் பாடல் ஒன்றையும் எழுதி உள்ளார்.