
தவெக தலைவர் விஜய் – சங்கீதா விவாகரத்து பிரச்னை நடந்து வந்த நிலையில், விஜயுடன் திரிஷா, திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், தற்போது சினிமாவை விட்டு திரிஷா விலகவுள்ளதாகவும், விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தொடர்ந்து இணையத்தில் தகவல்கள் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தொடர்ந்து தன் மீதானசர்ச்சைகள் குறித்து மவுனம் காத்து வந்த நடிகை திரிஷா தற்போது மனம் திறந்துள்ளார்
இது குறித்து நடிகை திரிஷா தனது ‘இன்ஸ்டா கிராம்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது,” என் கதை முடிந்து விட்டதா? நான் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டேனாம். பணக்கார தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டேன். ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளை பெற்று அதன் இரண்டாவது பிறந்தாளை நேற்று கொண்டாடினேன். இன்றைய கற்பனை கதைக்கு வேறு ஏதாவது சேர்க்க வேண்டுமா” என்றும் மிகவும் காட்டத்துடன் பதிவிட்டுள்ளார்.












