பொதுவாக ஆல்பம் சார்ந்த பாடல்கள் என்றால் காதல் பற்றிய பாடல்களே உருவாக்கப்படுவது வழக்கம். அந்த வரிசையில் தமிழ்க்கடவுள் முருகன் பற்றிய பாடல் ஆல்பம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.சூரஜ் குமார் புரொடக்ஷன்ஸ் சார்பில், நடிகர் சூரஜ் குமார் நடித்து இந்தப் பக்திப் பாடலைத் தயாரிக்கிறார்.இவருடன்
S4 ஸ்டுடியோஸ் சார்பில் சதிஷ் குமார் . சி இந்த ஆல்பத்தை இணைந்து தயாரிக்கிறார்.
‘தமிழ் கடவுள்’முருகனுக்கு எத்தனை எத்தனை பெயர்கள்! கந்தன், கடம்பன், கதிர்வேலன், குகன், குமரன், சேயோன், காங்கேயன், கார்த்திகேயன் ,சண்முகன், சாமிநாதன், குருபரன், ஆறுமுகன், வேலன், வடிவேலன், சேவற் கொடியோன், சேந்தன், மயில்வாகனன் என்று பல்வேறு பெயர்களில் புகழ்பெற்ற முருகன் பற்றி மிகப் பிரமாண்டமாக இந்தப் பாடல் தயாராகிறது. என்றார் சுராஜ்குமார்.
இப்பாடலை விஜய் கிரண் இயக்குவதோடு, ஓளிப்பதிவும் செய்திருக்கிறார்.சென்னை. மற்றும் வேலூரில் இந்தத் தமிழ்கடவுள் பாடலுக்குப் படப்பதிவு செய்து வருகின்றனர். சஞ்சய் மாணிக்கம் இசையில் உருவான இந்தப் பாடல் , காலம் கடந்தும் பேசப்படும் முருகப்பெருமான் பாடல்கள் வரிசையில் சேரும் என்கின்றனர் படக்குழுவினர்.
காதல் பாடல்கள் ஏராளம் வெளியாகும் நிலையில், கந்தன் புகழ்பாடும் இந்த முருகன் பக்திப் பாடலை இந்தக் குழுவினர் மிகுந்த பொருள் செலவில் தயாரித்து வருகின்றனர்.












