சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.செளந்திரராஜன் தொடங்கிய பலர் முருகன் குறித்து பக்தி பாடல்களை வெளியிட்டுள்ளனர். காலம் கடந்த அந்த பாடல்கள் நிலைத்து நிற்கின்றன. இப்போது முருகப்பெருமான் குறித்த ஆல்பம் பாடல்கள் பிரபலமாகி வருகின்றன. அந்தவகையில் விஜய்கிரண் இயக்கத்தில் சூரஜ் குமார் நடித்த ‘தமிழ்கடவுள்’ என்ற ஆல்பம் 1 மில்லியன் பார்வைகளை கடந்து பிரபலமாகி வருகிறது.சஞ்சய்மாணிக்கம் இசையமைத்துள்ளார். எஸ்.4 ஸ்டூடியோஸ் சார்பில் சதிஷ் குமார் .சி இந்த ஆல்பத்தை இணைந்து தயாரித்துள்ளார்.
தமிழ்கடவுள் ஆல்பம் குறித்து இயக்குனர் விஜய்கிரண் கூறியது: நான் ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஜீவன் மகன். மைனா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாரிடம் பல பல படங்களில் துணை, இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். எஸ்.ஏ.சி, பா.விஜய் நடித்த நையப்புடை என்ற படத்தை இயக்கி உள்ளேன். ஒரு முருகன் பாடல் பண்ணுவோம் என சூரஜ் ஐடியா கொடுக்க இந்த வேலைகளை தொடங்கினோம். முருககடவுள் பெருமை சொல்லும் இந்த ஆல்பத்தில் சூரஜ்குமார் ஆடிப்பாடியுள்ளார், நான் இயக்கி உள்ளேன். ஜன்மநட்சத்திரம், ஒருநொடி படங்களுக்கு இசையமைத்த சஞ்சய்மாணிக்கம் பாடி இசையமைத்துள்ளார். சதீஷ் நடனம் அமைத்துள்ளார்.
வேலுார் தீர்த்தகிரி வடிவேலு முருகன் கோயிலில் கலர்புல்லாக இந்த பாடலை உருவாக்கினோம்.உலகில் உள்ள 3வது உயரமான கோயி்ல் அது. 92 அடி முருகன் சிலை முன்பு பாடல்களை எடுத்தோம். அந்த சமயத்தில் 42டிகிரி வெயில் கொளுத்தியது. ஆனாலும், டான்சர், குழந்தைகள் என அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க, சூரஜ் சிறப்பாக ஆட பாடலை வெற்றிகரமாக முடித்தோம். பல தடைகளை தாண்டி பாடல் சூப்பராக வந்தது. இந்த பாடலுக்கும், தமிழக முதல்வர் விஜய்க்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
சூரஜ் காஸ்ட்யூமில் முதல்வர் டச் இருக்கும். சூரஜ் கெட்அப், டான்ஸ் ஸ்டைல், பாடல் வரிகள், இசை ஆகியவை ஆல்பத்துக்கு பிளஸ் ஆக அமைந்தது. தமிழ்கடவுள் பாடலை இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார். காலம் கடந்து முருகன் பாடல்கள் மக்கள் நிலைத்து நிற்கும். தமிழ் கடவுள் ஆல்பமும் அப்படி பேசப்படும் என நம்புகிறோம். மொத்தம் ஐந்து பாடல்களை உருவாக்க நினைத்துள்ளோம். அடுத்தடுத்த மீதி 4 பாடல்கள் வரும்’’ என்கிறார்












