நகைச்சுவை நடிகர் கிங்காங், தனது மகளுக்கு கடந்த ஆண்டு தனது மகள் கீர்த்தனா-நவீன் ஆகியோரது திருமணத்தைஅரசியல் பிரமுகர்கள், திரையுலக நடிகர்கள், நடிகைகள் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடத்தி வைத்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சென்னை கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனா, நவீன் தம்பதியினருக்கு, அழகான, ஆரோக்கியமான பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளது. தான் தாத்தாவான மகிழ்ச்சியை அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.












