‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’ உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், தற்போது தொழில்முனைவோராக தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக அவர் ரகசியமாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
பொதுவாக பிரபலங்கள் ஏற்கனவே சந்தையில் உள்ள தயாரிப்புகளுக்கு விளம்பரத் தூதர்களாக மட்டுமே செயல்படுவார்கள். ஆனால், சாக்ஷி அகர்வால் அதற்கு விதிவிலக்காக, ஊட்டச்சத்து தேவையை கண்டறிவது முதல் அதன் தரம், தயாரிப்பு கலவை வரை அனைத்து பணிகளிலும் நேரடியாக பங்கேற்றுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்ட அவர், இறுதி 11 மாதங்களில் மட்டும் தயாரிப்பு கலவையில் 551 முறை மாற்றங்களைச் செய்து இந்த பிராண்டை உருவாக்கியுள்ளார்.
தாவர அடிப்படையிலான பிரீமியம் புரோட்டீன் பார்:’OKUU’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக தாவர அடிப்படையிலான (Plant-Based) பிரீமியம் புரோட்டீன் பார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உடல்தகுதியை பராமரிப்பதிலும், திரைப்படப் பணிகளை சமநிலைப்படுத்துவதிலும் ஏற்பட்ட தனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் இதை அவர் உருவாக்கியுள்ளார். இந்த புரோட்டீன் பாரில், 35 கிராம் புரோட்டீன் 14 கிராம் நார்ச்சத்து 6 கிராம் கொலாஜன் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், இதில் சர்க்கரை, தேவையற்ற ரசாயனங்கள் மற்றும் செயற்கை சேர்மங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சாக்ஷி அகர்வால் கூறுகையில்,
“கடந்த 5 ஆண்டுகளாக நடிகை வாழ்க்கையுடன் இணைந்து, ‘OKUU’ நிறுவனத்தை உருவாக்கும் பணியிலும் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்தேன். இது ஒரு பிரபலத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட பிராண்ட் அல்ல. இந்திய மக்களுக்கு தரமான மற்றும் சிறந்த ஊட்டச்சத்து தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது. இன்று நான் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த கனவை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.இதன் மூலம், நடிகை சாக்ஷி அகர்வால் இந்தியாவின் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதுடன், நடிகையாகவும் தொழில்முனைவோராகவும் தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்துள்ளார்.












