தமிழ்த்திரையுலகில் கடந்த 1960-ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி என பல்வேறு மொழிகளில் 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் 66 ஆண்டுகளை நிறைவு செய்து, 67ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் . 1895ஆம் ஆண்டு டிசம்பரில், லூமியர் சகோதரர்கள் முதல் படத்தை திரையிட்டனர். இதனால், உலகத் திரைப்படத் துறை சுமார் 130 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்களை நிறைவு செய்துள்ளது. இந்த ஒட்டுமொத்த சினிமா வரலாற்றில் நான் மட்டுமே 67 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன் என்பதை எனது குழுவினர் எனக்கு நினைவூட்டினர்.அதாவது, ஒட்டுமொத்த சினிமா வரலாற்றின் பாதி அளவு காலத்திற்கும் மேலாக நான் சினிமாவில் பயணத்திருக்கிறேன் என்பது வியப்பிற்குரிய, அசாதாரணமான விஷயமாக உள்ளது. இருப்பினும், எனது சொந்தக் கணக்கின்படி, சினிமாவில் 20 ஆண்டுகள் மட்டுமே எனது உண்மையாக கற்றுக் கொண்ட காலம் என்று கூறுவேன்.அந்த வகையில், நான் அநேகமாக சினிமாவின் மூத்த ‘ஜென் சி’ (Gen Z) ஆக இருக்கலாம்” என்று கமல்ஹாசன் அந்த பதிவில் பெருமிதத்துடனும் குறிப்பிட்டுள்ளார்.












