Wednesday, September 9, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கருணாஸுக்கு நிமிஷா கொடுத்த முத்தம்!

admin by admin
September 8, 2026
in News
419 5
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் நடிகர் தர்ஷன் பேசுகையில்,, “இந்தப் படத்தில் எனக்கு ரைட்டர் கேரக்டர். அனுப்பி வைத்த எல்லா விருது விழாக்களிலும் இந்தப் படம் விருது வென்றது. மிகச்சிறந்த வெற்றி படமாக இது மாற வேண்டும். அனைவரும் திரையரங்குகளில் வந்து படம் பாருங்கள். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகை நிரோஷா, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பு என்று தெரியாமல் இயல்பானதாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.  உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை”.

You might also like

செப்டம்பர் 18ல் வெளியாகும் புதுமுகங்களின் ‘கோல்ட் கால்’ !

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’ !

நடிகர் கவி, “பல நாடுகளின் விருது விழாக்களில் இந்த படம் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளியது. எப்போது நம் நாட்டு மக்களுடன் இந்த படத்தை பார்க்க இருக்கிறோம் என்று ஆவலுடன் காத்திருந்தோம். மக்களுடன் இணைந்து இந்த படத்தை கொண்டாட இருக்கிறோம். முக்கியமான படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”.

நடிகர் பாண்டி, “ரொம்ப நாள் இந்தப் படத்திற்காக காத்திருந்தோம். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. ‘பசங்க’, ‘கோலி சோடா’ படங்களை தாண்டி பெயர் எடுக்க வேண்டும் என ஒவ்வொரு படத்திலும் எதிர்பார்த்தேன். அது இந்த படத்தில் நடக்கும் என நம்புகிறேன். உங்கள் அனைவரது ஆதரவும் தேவை”.

நடிகை சாஷா, “இயக்குநர் சஜீவ் சார், தயாரிப்பாளர் ஜித்தேஷ் சாருக்கு நன்றி. இந்த படத்தில் ஹீரோவின் தங்கை மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ராமேஸ்வரத்தில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. எல்லோருமே கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். 13 விருது விழாக்களில் இந்த படம் விருது வென்று இருக்கிறது. எல்லோரும் திரையரங்குகளில் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.

இயக்குநர் சஜீவ் பழூர், ” ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்கள் சின்ன கருவில் இருந்து கதையானது. தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதில் ‘என்ன விலை’ படத்தை இயக்கியுள்ளேன். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் “.

நடிகர் கருணாஸ், “கடந்த 2001 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பாலா அண்ணன் இயக்கத்தில் லொடுக்கு பாண்டியாக திரையுலகில் எனது பயணத்தை ஆரம்பித்தேன். நான் அதிகம் மலையாள படங்களை விரும்பி பார்ப்பேன். அதனால் மலையாள ரைட்டர், இயக்குநர்கள், டெக்னீஷியன்ஸ் உடன் இணைந்து ஒரு படமாவது பணிபுரிய ஆசைப்பட்டேன். அது இப்போது நடந்திருக்கிறது. இந்த படம் சாமானியர்களை பற்றியது. அதனால் தான் இயல்பான நடிகர்களை தேர்வு செய்துள்ளார். எனக்கு இன்று பெரிதாக வியாபாரம் இல்லை. இருந்தாலும் என்னை நம்பி ஏழு கோடி ரூபாய் தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு கதை மீது நம்பிக்கை. இந்திய சினிமாவில் இதுவரை யாரும் எழுப்பாத ஒரு கேள்வியை இந்த படத்தில் இயக்குநர் சஜீவ் எழுப்பி இருக்கிறார். எனது இருபது ஆண்டு கால ஆசையை இந்த படம் நிறைவேற்றி இருக்கிறது.

அட்வகேட் கதாபாத்திரத்தில் நிமிஷா அற்புதமாக நடித்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமானவர்களை இயக்குநர் திறமையாக தேர்வு செய்து இருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நெட்ஃபிலிக்ஸ் போன்ற முன்னணி ஓடிடி தளம் விலைக்கு வாங்கி இருப்பது மகிழ்ச்சி. ‘நந்தா’ படத்திற்கு பிறகு என் மனதிற்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் இது. இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து என் மனைவி முதன் முதலாக இந்த படத்தில் தான் பாராட்டி இருக்கிறார். நிமிஷா மேடமும் என்னுடைய நடிப்பை பார்த்து சிலிர்த்து கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். நிச்சயம் இந்த படமும் என்னுடைய கதாபாத்திரமும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

 
admin

admin

Related Posts

செப்டம்பர் 18ல்   வெளியாகும் புதுமுகங்களின் ‘கோல்ட் கால்’ !
News

செப்டம்பர் 18ல் வெளியாகும் புதுமுகங்களின் ‘கோல்ட் கால்’ !

by admin
September 8, 2026
அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!
News

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

by admin
September 8, 2026
சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும்  ‘பிக்காசோ’ !
News

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’ !

by admin
September 8, 2026
அபிநயா நடிப்பில் உருவான குறும்படம் ‘ஹோப்’ !
News

அபிநயா நடிப்பில் உருவான குறும்படம் ‘ஹோப்’ !

by admin
September 8, 2026
மணிரத்னத்தின் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சாய் பல்லவி  நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ !
News

மணிரத்னத்தின் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சாய் பல்லவி நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ !

by admin
September 7, 2026

Recent News

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

September 8, 2026
சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும்  ‘பிக்காசோ’ !

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’ !

September 8, 2026
அபிநயா நடிப்பில் உருவான குறும்படம் ‘ஹோப்’ !

அபிநயா நடிப்பில் உருவான குறும்படம் ‘ஹோப்’ !

September 8, 2026
கருணாஸுக்கு நிமிஷா கொடுத்த முத்தம்!

கருணாஸுக்கு நிமிஷா கொடுத்த முத்தம்!

September 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?