Saturday, October 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

சாமான்யனின் நேர்மைக்கு இந்தச் சமூகம் தரும் விலை என்ன? (விமர்சனம்)‘என்ன விலை’!

admin by admin
September 19, 2026
in Reviews
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 13 க்கும் மேற்பட்ட விருதுகளைக் குவித்து, வெளியீட்டிற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘என்ன விலை’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கிய சஜீவ் பழூர் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் பேசாத ஒரு விளிம்புநிலை மனிதனின் வாழ்வியலை மிக அழுத்தமாகப் பேசுகிறது.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்பகுதியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்னி தீர்த்தக் கடலில் நீராடினால் பாவங்கள் நீங்கும், பித்ரு தோஷங்கள் விலகும் என்ற பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கையையொட்டி, பக்தர்கள் கடலில் செலுத்தும் தங்கம், வெள்ளி மற்றும் காசுகளைச் சேகரித்து, மீன்பிடிப்பு இல்லாத வறுமைக் காலங்களில் தங்களின் ஜீவாதாரத்தை ஓட்டும் எளிய மீனவர்களின் வாழ்வாதாரப் பின்னணியில் இருந்து இந்தத் திரைப்படம் தொடங்குகிறது.

You might also like

‘ஆல் பாஸ்’  –  விமர்சனம்!

‘தாய் நிலம்’ – விமர்சனம்!

‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ (Don’t Trouble The Trouble) விமர்சனம்!

கலாமயா சினிவெர்ஸ் சார்பில் ஜித்தேஷ் வி மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படம், ஒரு சாமான்யனின் நேர்மைக்கு இந்தச் சமூகம் கொடுக்கும் விலை என்ன? என்ற அதிரடியான கேள்வியை எழுப்புகிறது.

இக்கதையில் அக்னி தீர்த்தக் கடலில் மூழ்கி நாணயங்களைச் சேகரிக்கும் நலிந்த மீனவரான தவசிமுத்து என்ற கதாபாத்திரத்தில் கருணாஸ் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வறுமையிலும் நேர்மையும், சற்று அப்பாவித்தனமும் கொண்ட தவசிமுத்துவுக்குக் கடலில் காசுகளை சேகரிக்கும்போது ஒரு பழமையான தங்கப்பதக்கம் கிடைக்கிறது. அதை காவல் துறையிடம் ஒப்படைக்க முற்படும்போது, ஒரு நேர்மையற்ற போலீஸ்காரரின் சுயநலத்தால் அவர் பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறார்.

ஒரு சாமான்யன் மீது சுமத்தப்படும் பொய் வழக்கும், அதிகார வர்க்கத்தின் அவகாரமான செயலும் அவனது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் எப்படி நிலைகுலைய வைக்கிறது என்பதைத் தனது முதிர்ச்சியான மற்றும் எதார்த்தமான நடிப்பின் மூலம் கருணாஸ் பார்வையாளர்களின் மனதை உருக வைக்கும் வகையில் கடத்தியுள்ளார். அவருக்கு இணையாக, தவசிமுத்துவின் நேர்மையை உணர்ந்து அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர் காஞ்சனா கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயன் உண்மையை வெளிக்கொண்டுவரப் போராடும் ஒரு வழக்கறிஞருக்குரிய உடல் மொழியோடு, மிக கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

முதன்மை கதாபாத்திரங்கள் மட்டுமின்றி, தவசிமுத்துவின் மனைவியாக வரும் விஜயலட்சுமி வீரமணி மற்றும் தங்கையாக நடித்துள்ள சாஷா சிவகுமார் ஆகியோரும் தங்களின் இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்கள். பொய்களின் கேலிப்பேச்சில் சிக்கித் தவிக்கும் மகனாக வரும் சிறுவன் கமலேஷ் ஜெகன், பார்ப்பவர்களுக்கே ஒருவித பரிதாபத்தையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தும் வகையில் மிக எதார்த்தமாக நடித்துள்ளான்.

இவர்களுடன் பிரபு, பூர்ணிமா பாக்யராஜ், நிழல்கள் ரவி, மோகன் ராமன், மொட்ட ராஜேந்திரன், ஒய்ஜி மகேந்திரன், லொள்ளு சபா சாமிநாதன், பாண்டி, கவிதாலயா கிருஷ்ணன், தீபா ஷங்கர், கோதண்டம் மற்றும் சேரன் ராஜ் உள்ளிட்டவர்கள் ஒட்டுமொத்தத் திரைக்கதைக்கும் கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு இப்படத்திற்கு மிகப்பெரிய அரணாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி, ராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்தக் கடற்கரையின் இயல்புத்தன்மை மற்றும் மீனவ மக்களின் வாழ்விடங்களை எந்தவித செயற்கைத்தனமும் இன்றி அப்படியே கேமராவிற்குள் கடத்தியுள்ளார். ஸ்டுடியோவிற்குள் அமைக்கப்பட்ட அரங்குகள் கூட ஒரிஜினல் இடங்களைப் போன்றே தோற்றமளிப்பது கலை இயக்குநரின் அசாத்திய திறமைக்குச் சான்றாகும். மின்சார வசதி கூட இல்லாத மீனவக் குடிசைகளின் எதார்த்த நிலை மற்றும் நீதிமன்றக் காட்சிகள் படத்திற்கு நம்பகத்தன்மையைக் கூட்டுகின்றன.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. கதையின் கனத்தையும், நீதிமன்ற வாதங்களின் தீவிரத்தையும் தனது இசையின் மூலம் பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் அவர் முழு வெற்றி பெற்றுள்ளார்.

ஒரு ஆவணப்பட இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கி, நூறு படங்களுக்கும் மேல் இயக்கிய அனுபவமிக்க சஜீவ் பழூர், ஒரு ஆவணப்படத்திற்குரிய எதார்த்தமும், கமர்சியல் சினிமாவுக்குரிய விறுவிறுப்பும் தடம் மாறாமல் இந்தச் சட்டப் போராட்டக் கதையை இயக்கியுள்ளார்.

‘என்ன விலை’ திரைப்படம் தியேட்டரில் பார்க்க வேண்டிய ஒரு தரமான படைப்பாகத் தனித்து நிற்கிறது.

admin

admin

Related Posts

‘ஆல் பாஸ்’  –  விமர்சனம்!
Reviews

‘ஆல் பாஸ்’  –  விமர்சனம்!

by admin
October 8, 2026
‘தாய் நிலம்’ – விமர்சனம்!
News

‘தாய் நிலம்’ – விமர்சனம்!

by admin
October 8, 2026
‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ (Don’t Trouble The Trouble) விமர்சனம்!
Reviews

‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ (Don’t Trouble The Trouble) விமர்சனம்!

by admin
October 3, 2026
‘சிக்மா’ – விமர்சனம்!
Reviews

‘சிக்மா’ – விமர்சனம்!

by admin
October 3, 2026
‘ஏழு கடல் ஏழுமலை’ – விமர்சனம்!
Reviews

‘ஏழு கடல் ஏழுமலை’ – விமர்சனம்!

by admin
October 3, 2026

Recent News

முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவான முதல் தமிழ் படம், ‘அமெரிக்க ஆவி’!

முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவான முதல் தமிழ் படம், ‘அமெரிக்க ஆவி’!

October 10, 2026
நியூயார்க் ஐநா தலைமையகத்தில் உலக பருத்தி தினம்: எல்.கே. சுதீஷ் உரை!

நியூயார்க் ஐநா தலைமையகத்தில் உலக பருத்தி தினம்: எல்.கே. சுதீஷ் உரை!

October 10, 2026
மாதவிடாய் காலப் பராமரிப்பை தற்காலிகமாகக் கருத்தில் கொள்ளாதீர்கள்! – சமந்தா பேச்சு!

மாதவிடாய் காலப் பராமரிப்பை தற்காலிகமாகக் கருத்தில் கொள்ளாதீர்கள்! – சமந்தா பேச்சு!

October 10, 2026
குமரன் தங்கராஜனின் ‘இறுதிப்பக்கம் 2’ அப்டேட்!

குமரன் தங்கராஜனின் ‘இறுதிப்பக்கம் 2’ அப்டேட்!

October 10, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?