Saturday, September 26, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மதுரையில் கிடா விருந்துடன் தொடங்கிய தனுஷ் படப்பிடிப்பு!

admin by admin
September 25, 2026
in News
419 5
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது பொதுக்குழு கூட்டம் !

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

தமிழின் முன்னணி நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக  தொடங்கியுள்ளன. லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணையும் படம் என்பதால், D56 திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Sithara Entertainments நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி, Primark Productions நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாய் சௌஜன்யா  ஆகியோர் இணைந்து இப்படத்தை  தயாரிக்கின்றனர்.
மதுரை அருகில் சிவகங்கை மாவட்டத்தில்  உள்ள கருப்பணசாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. பூஜை நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மக்களுக்கு கிடா விருந்தளித்து, பெரும் கோலாகலமாக படப்பிடிப்பு பணிகளை துவக்கியுள்ளது படக்குழு. 
இந்நிகழ்வினில் நடிகர் வடிவேலு பேசியதாவது…, 
மாரநாடு கருப்பணசாமி கோயில் மிகவும் விசேஷமான ஒரு கோயில். இந்த ஊரில் பிறந்த ஒவ்வொருவருமே கருப்பசாமிதான். இவ்வளவு பெரிய கூட்டத்தையும், மக்களின் அன்பையும் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தனுஷ் சாரின் படத்துக்கான பூஜை இவ்வளவு பெரிய விழாவாக நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவே மாநாடு போல இருக்கிறது. 
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷ் சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இந்தப் படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. ஏன் இடையில் அவருடன் நடிக்கவில்லை என்று கேட்கலாம். சினிமாவில் சில விஷயங்கள் சரியான நேரத்தில் அமைய வேண்டும். இப்போது இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி.
இந்தப் படம் சாதாரணமான படம் இல்லை. எந்த அரசியல் தாக்கமும் இல்லாத, தனித்துவமான ஒரு படம். இந்தக் கதையை கேட்டபோது மிகவும் பெருமையாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இது மிகப்பெரிய வெற்றியைப் பெறக்கூடிய படம் என்று நான் நம்புகிறேன். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை; இன்னும் சில நாட்களில் தலைப்பு அறிவிக்கப்படும்.
மதுரை மண்ணில், அதுவும் மாரனாடு கருப்பசாமி கோயிலில் இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுடைய அன்பும் ஆசீர்வாதமும் எங்களுக்கு என்றும் தேவை. இவ்வளவு பெரிய அளவில் வந்து இந்த பூஜையை சிறப்பித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது.., 
வழக்கமாக படங்களின் பூஜையை சென்னையில்தான் நடத்துவார்கள். ஆனால், மாரனாடு கருப்பசாமியின் அருளோடும், உங்கள் அன்புக்கு முன்னாலும் இந்தப் படத்தின் பூஜை நடைபெறுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதற்காக தனுஷ் சார், இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
தமிழரசன் பச்சமுத்து ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர். நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத்தின் மூலம் சிறந்த உணர்வை உருவாக்கக்கூடிய ஒரு இயக்குநராக இருக்கிறார். ‘லப்பர் பந்து’ படத்திலேயே அவருடைய திறமை உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்போது D56 படத்திலும் அவர் பிரமாதமாக பணியாற்றியிருக்கிறார். நம்முடைய மண்ணின் கதையை மிகவும் அழகாக உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தை நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள். இந்தப் படத்தில் வடிவேலு சார், ப்ரீத்தி முகுந்தன்  உள்ளிட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். மிகச் சிறந்த டீம் ஒன்றை தமிழரசன் பச்சமுத்து சார் உருவாக்கியிருக்கிறார்.
கருப்பசாமியின் அருளோடும், உங்கள் அன்போடும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள். படத்தின் பூஜைக்கே இவ்வளவு பெரிய அளவில், மாநாடு போல வந்து ஆதரவு கொடுத்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி.”
நடிகர் தனுஷ் பேசியதாவது.., 
இந்த பூஜை, இன்று பின்னால் இருக்கும் சாமியையும், முன்னால் இருக்கும் உங்களையும் நம்பித்தான் நடைபெறுகிறது. இன்று நான் அதிகம் பேச விரும்பவில்லை. அனைவரும் இங்கு நடைபெறும் கடா விருந்தில் வயிறார சாப்பிட்டு, பத்திரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
விரைவில் ஓம் படத்தின் ஆடியோ லாஞ்சில் உங்களை மீண்டும் சந்திப்பேன். இங்கு வந்து உங்கள் அன்பையும், ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். 
இப்படத்தில் நடிகர்கள் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, பிரித்தி முகுந்தன் மற்றும் விஜய்குமார் உள்ளிட்டோர் இப்படத்தில் இணைந்துள்ளனர். 
இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இளம் தலைமுறையில் தனது இசையின் மூலம் கவனம் ஈர்த்து வரும் சாய் அபயங்கர், தனுஷ் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
D56 படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் நடிப்பு, தமிழரசன் பச்சமுத்துவின் தனித்துவமான கதை சொல்லும் பாணி, சாய் அபயங்கரின் இசை என பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள D56, ஆரம்பகட்டத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
admin

admin

Related Posts

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது  பொதுக்குழு கூட்டம் !
News

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது பொதுக்குழு கூட்டம் !

by admin
September 26, 2026
5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!
News

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

by admin
September 26, 2026
துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!
News

துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

by admin
September 26, 2026
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!
News

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

by admin
September 26, 2026
‘ராமாயணம்’ :   ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியானது!
News

‘ராமாயணம்’ : ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியானது!

by admin
September 26, 2026

Recent News

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

September 26, 2026
துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

September 26, 2026
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

September 26, 2026
‘ராமாயணம்’ :   ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியானது!

‘ராமாயணம்’ : ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியானது!

September 26, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?