Thursday, October 8, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் !

admin by admin
October 8, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

Story Culture நிறுவனம் தயாரிப்பில், Saregama India Limited நிறுவன வெளியீட்டில்,  பாலாஜி – மதுமிதா நடிப்பில், சசி மாஸ்டர் இயக்கம் மற்றும் நடன அமைப்பில் உருவாகியுள்ள ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடலின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தமிழ் இசை உலகில் புதுமையான முயற்சியாக உருவாகியுள்ள ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல், படக்குழு தெரிவித்தபடி, லண்டனில் முழுமையாக படமாக்கப்பட்ட முதல் ஆல்பம் பாடல் என்ற சிறப்புடன் உருவாகியுள்ளது. இந்தப் பாடலில் பாலாஜி மற்றும் மதுமிதா ஜோடியாக நடித்துள்ளனர்.

You might also like

‘தாய் நிலம்’ – விமர்சனம்!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்! ரஜினி,கமல் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்!!

‘ஹைக்கூ’வின் ரொமான்டிக் காமெடி திரைப்பட  டிரெய்லர் வெளியானது!

பிரபல நடன இயக்குநர் சசி மாஸ்டர் இந்தப் பாடலை இயக்கியதுடன், நடன அமைப்பையும் மேற்கொண்டுள்ளார். பாடலுக்கு AJ இசையமைத்துள்ளார். பாடலை G.V. பிரகாஷ் மற்றும் ஸ்னேகா  இணைந்து பாடியுள்ளனர். பாடலுக்கான வரிகளை K.U. கார்த்திக் எழுதியுள்ளார். இந்த ஆல்பம் பாடலின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  வடபழனியில் உள்ள பிரசாத் லேப் வளாகத்தில் நடைபெற்றது. இதில் ‘பூகி பொன்னம்மா’ பாடல் குழுவினருடன், திரையுலகம் மற்றும் சின்னத்திரையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ‘பூகி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் குழுவினர் தங்களது அனுபவங்களையும், பாடல் உருவான விதம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.

பாலாஜி திருமால் பேசியதாவது..,
“பூக்கி பொன்னம்மா” பாடலின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த நாள் எனக்கு மிகவும் சிறப்பானதும், உணர்வுப்பூர்வமானதுமாக இருக்கிறது. இவ்வளவு பேர் என்னை ஆதரிப்பதற்காக இங்கு வந்து நிற்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் பொதுவாக தனியாகவே இருப்பவன். ஆனால் இந்தப் பயணத்தில் மாஸ்டர் உள்ளிட்ட பலரும் எனக்கு கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானது. முதலில் UK-ல் மாஸ்டர் மற்றும் நண்பர்களுடன் ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது, மீடியாவுக்குள் வர வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று மாஸ்டரிடம் கேட்டேன். “சரி, ஏதாவது திட்டமிடலாம்” என்று சொன்னவர், மறுநாளே அழைத்து ஒரு பாடல் செய்யலாம் என்று கூறினார். அதுதான் என்னுடைய முதல் பாடல். உண்மையில் எனக்கு நடனம் ஆடிய அனுபவமே இல்லை. பள்ளி, கல்லூரி என எந்தக் காலத்திலும் நான் நடனம் ஆடியதில்லை. இதுதான் முதல் முறையாக நடனம் ஆடியிருக்கிறேன். அதற்காக மாஸ்டருக்கு மனமார்ந்த நன்றி. மதுமிதாவுக்கும் என்னுடைய சிறப்பு நன்றி. புதிதாக ஒருவர் வரும்போது அவருடன் இணைந்து நடிப்பதையும், அவரை ஏற்றுக்கொள்வதையும் எல்லோரும் எளிதாகச் செய்ய மாட்டார்கள். ஆனால் மதுமிதா என்னை மிகவும் இயல்பாக ஏற்றுக்கொண்டு நடித்தார். அதற்காக நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். இசையமைப்பாளர் AJ முதல் டியூனையே கொடுத்தபோது எங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்துவிட்டது. அதில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யாமல் அதையே பாடலாக உருவாக்கினோம். பின்னர் கார்த்திக் பிரதருடன் இணைந்து பாடல் வரிகள் உருவானது. சிறிய அளவில் சில மாற்றங்கள், டியூனிங் இருந்தாலும் பாடல் வளர்ந்த விதத்தில் நாங்கள் மிகவும் திருப்தியாக இருந்தோம். முதலில் மாஸ்டரிடம், “பாட்டு கொஞ்சம் சுலபமாக இருக்கட்டும்; அப்போதுதான் என்னால் ஆட முடியும்” என்று கேட்டேன். ஆனால் போகப்போக பாடலின் வேகம் அதிகமாகிவிட்டது. ஹூக் ஸ்டெப் எல்லாம் வரும்போது இதையெல்லாம் நம்மால் செய்ய முடியுமா என்று நினைத்தேன். ஆனால் இரண்டு வாரங்கள் தொடர்ந்து பயிற்சி கொடுத்து என்னை ஆட வைத்தார்கள். மாதேஷ் பிரதர் மிகவும் சிறப்பாக பயிற்சி கொடுத்தார். சென்னை வந்த பிறகும் தினமும் என்னை அழைத்துச் சென்று பல விஷயங்களைப் பயிற்சி செய்ய வைத்து வருகிறார். அந்த அளவுக்கு தனிப்பட்ட அக்கறையுடன் எனக்காக உழைத்ததற்கு மாதேஷ் பிரதருக்கும், எடிட்டர் பிரதருக்கும் மனமார்ந்த நன்றி.

 இந்தப் பாடலை நான் சினிமாவுக்குள் என்னுடைய அறிமுகத்திற்காகவே செய்திருக்கிறேன். நான் திரையுலகிற்குள் வருகிறேன் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காகத்தான் இந்தப் பாடல் வெளியீட்டு விழாவையும் நடத்தினோம். மிக விரைவில் நாங்கள் ஒரு திரைப்படம் செய்ய இருக்கிறோம். அதுகுறித்த அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். இங்கு வந்து என்னை வாழ்த்திய ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னைப் பற்றிச் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நான் பிறந்தது அசோக் நகரில். என்னுடைய அப்பா திரைப்படத் தயாரிப்பாளர். ‘நூறாவது நாள்’, ‘24 மணி நேரம்’ உள்ளிட்ட பல படங்களை அவர் தயாரித்திருக்கிறார். ஆனால் நான் மீடியாவுக்குள் வரக்கூடாது என்பதற்காக என்னுடைய அம்மா என்னை கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்று படிக்க வைத்தார். சுமார் பத்து ஆண்டுகளாகவே சினிமா மற்றும் மீடியாவுக்குள் வர வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை எனக்குள் இருந்தது. ஆனால் வாழ்க்கையில் குடும்பம், பெற்றோர் என சில பொறுப்புகள் இருக்கின்றன. என்னுடைய அப்பா 1999-ஆம் ஆண்டிலேயே காலமானார். வீட்டில் ஒரே மகன் என்பதால் முதலில் குடும்பத்திற்கான வாழ்க்கைப் போராட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. அதே நேரத்தில் என்னுடைய சினிமா மீதான ஆர்வத்தை மட்டும் நான் விட்டுவிடவில்லை. இப்போது அந்தப் பாதையில் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறேன். நிச்சயம் தொடர்ந்து முயற்சி செய்வேன். இங்கு நண்பர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வளவு பேர் வந்து என்னை ஆதரிப்பது எனக்கு மிகப்பெரிய விஷயம். அனைவருக்கும் மீண்டும் நன்றி.
நடிகை மதுமிதா பேசியதாவது…,
“எல்லாரும் வந்திருக்கிறதுக்கு ரொம்ப நன்றி. முதலில் கடவுள், என் குடும்பம், நண்பர்கள் மற்றும் சசி மாஸ்டருக்கு இந்த அருமையான வாய்ப்பை வழங்கியதற்காக நன்றி. உண்மையில் இந்த ஆல்பம் பாடல் எனக்கு ஒரு மேனிஃபெஸ்டேஷன் மாதிரி. சமீபத்தில் ஒரு ஆல்பம் பாடல் பார்த்தபோது, ‘நாமும் ஒரு ஆல்பம் பண்ண வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு ஒரு வாரத்துக்குள்ளேயே சன் டிவியில் பணியாற்றும் ஐசக் மூலம் அழைப்பு வந்தது. சசி மாஸ்டர் ஒரு பாடல் செய்கிறார், நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டார்கள். இப்படியொரு வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. பாலாஜிக்கு என்னுடைய வாழ்த்துகள். அவருடைய திரைப்பயணத்துக்கு ஆல் தி பெஸ்ட். இந்த ஆல்பம் இருவருக்குமே முதல் அறிமுகம். பாலாஜிக்கு திரைத்துறையில் அறிமுகம், எனக்கு ஆல்பம் பாடலில் முதல் அறிமுகம். லண்டனில் பல அழகான இடங்களைச் சுற்றிப் படமாக்கியிருக்கிறார்கள். லொகேஷன்களுக்காக மட்டும் மூன்று நாட்கள் ரெக்கி செய்திருக்கிறார்கள். பாடலைப் பார்த்த பிறகுதான் அதற்காக அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறது.

என்னை இதுவரை பெரும்பாலும் பாரம்பரியமான தோற்றத்தில்தான் பார்த்திருப்பார்கள். இந்தப் பாடலில் வெஸ்டர்ன் லுக்கில் என்னை இவ்வளவு அழகாகக் காட்டியதற்கு மாதேஷ் சாருக்கு நன்றி. AJ-க்கு அருமையான இசைக்காக நன்றி. முதல் முறை கேட்டபோதே பாடல் மிகவும் கேட்சியாக இருந்தது. சினேகாவுக்கும், ஷெர்மிக்கும், பிரின்ஸுக்கும், லண்டனில் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாடல் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். பிடித்திருந்தால் பாடலை லைக் செய்து, ஷேர் செய்து ஆதரவு கொடுங்கள். இந்தப் பாடலுக்கு உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்க வேண்டும். நன்றி.”

இயக்குநர் மற்றும் நடன இயக்குநர் சசி மாஸ்டர் பேசியதாவது..,
“பூக்கி பொன்னம்மா” என்னுடைய முதல் சர்வதேச ஆல்பம். இந்தப் பாடலை இயக்கியதோடு, நடன இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் முதலில் என்னுடைய மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கொஞ்சம் நீளமாகப் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால் நீங்கள் திரையில் பார்த்த அந்த ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் என்ன நடந்திருக்கிறது என்பதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். லண்டனில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது, நிகழ்ச்சி முடிந்த பிறகு பாலாஜி, பிரின்ஸ், ஷர்மிலா ஆகியோருடன் நடந்த ஒரு உரையாடலில்தான் இந்தப் பாடலுக்கான எண்ணம் உருவானது. பாலாஜிக்கு சினிமாவுக்குள் வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவர் மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த தயாரிப்பாளரின் மகன் என்ற விஷயத்தை அவர் எங்குமே சொல்லிக்கொள்ளவில்லை. ஷூட்டிங்கிலும் அவர் எப்படி இயல்பாக இருந்தாரோ, அப்படியேதான் இருந்தார். மிகவும் எளிமையான மனிதர். இந்தப் ப்ராஜெக்ட்டுக்காக பிரின்ஸும் ஷர்மிலாவும் உடனடியாக ஆதரவு கொடுத்தார்கள். இசையமைப்பாளர் A.J. ஒரு மணி நேரத்திற்குள் இசையை உருவாக்கினார். எந்தத் திருத்தமும் இல்லாமல் அதையே பாடலாக லாக் செய்துவிட்டோம்.

அதன்பிறகு அந்தப் பாடல் கு. கார்த்திக் பிரதரிடம் சென்றது. தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ற ஒரு வார்த்தையை பாடலில் வைக்கலாம் என்று பேசும்போது, ‘பூக்கி’ என்ற வார்த்தையை பாலாஜிதான் சொன்னார். அந்த வார்த்தை அப்போது டிரெண்டாக இருந்ததால், அதையே மையமாக வைத்து பாடலை உருவாக்கலாம் என்று முடிவு செய்தோம். இந்தப் பாடலின் உருவாக்கத்தில் பாலாஜியும் நிறைய ஐடியாக்களை கொடுத்திருக்கிறார். அனைவருடைய பங்களிப்பும் சேர்ந்து கிடைத்த சிறந்த முடிவுதான் இது. பின்னர் ‘சிறை’ படத்தைப் பார்த்து அதில் பணியாற்றிய ஒளிப்பதிவாளரை மிகவும் பாராட்டியிருந்தேன். எதிர்பாராத விதமாக அவர்தான் இந்தப் பாடலுக்கும் கேமரா செய்தார். அவருடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்த பிறகு எடிட்டிங்கிற்காக பிரவீன் அண்ணாவிடம் கொடுத்தோம். அவருடன் எனக்கு சுமார் 15 ஆண்டுகளாக நெருக்கமான உறவு இருக்கிறது. இந்தப் பாடலை உருவாக்கிய ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. லண்டனில் படப்பிடிப்பு நடத்துவது உண்மையிலேயே மிகவும் கடினமாக இருந்தது. வெயில் இருப்பது போல வெளியே தெரிந்தாலும், சில இடங்களில் மைனஸ் 5 டிகிரி வரை குளிர் இருந்தது. மதுமிதாவும் பாலாஜியும் குளிரை பொருட்படுத்தாமல் ஸ்லீவ்லெஸ் உடையுடன் ஏரிக்கரையில் நடனம் ஆட வேண்டியிருந்தது. நாங்கள் இரண்டு, மூன்று ஜாக்கெட்டுகளை அணிந்துகொண்டு நின்றாலும், அவர்கள் ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஜாக்கெட்டை கழற்றிவிட்டு நடனம் ஆடினார்கள். ஷாட் முடிந்ததும் கடும் குளிரில் நடுங்கியபடியே இருந்தார்கள். அதையும் பொருட்படுத்தாமல் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள்.

ஒவ்வொரு இடத்திற்கும் நீண்ட நேரம் பயணம் செய்தோம். கார்ட்ஸ்வெல் பகுதியில் இருந்து எடின்பர்க், அங்கிருந்து சென்ட்ரல் லண்டன் என சில பயணங்களே இரண்டரை முதல் மூன்று மணி நேரம் வரை இருந்தன. சரியான கால்ஷீட், போதுமான நேரம் என எதுவுமே இல்லாத சூழலில், கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்தினோம். அங்கிருந்த குழுவினர் அனைவரும் பயப்படாமல் முழு ஆதரவு கொடுத்தார்கள். மதுமிதாவும் பாலாஜியும் நேரம் எதுவாக இருந்தாலும் தயாராக இருந்தார்கள். அதேபோல் பின்னணியில் நடனமாடிய கலைஞர்களும் பெல்ஜியம், ஸ்பெயின், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வந்தவர்கள். அதனால் இந்தப் பாடல் ஒரு சர்வதேச அளவிலான படைப்பாக உருவானது. கார்ட்ஸ்வெல் பகுதியில் எடுத்த தொடக்கக் காட்சிக்கும் பல சவால்கள் இருந்தன. நாங்கள் முறையான அனுமதி வாங்கித்தான் படப்பிடிப்பைத் தொடங்கினோம். ஆனால் படப்பிடிப்பு தொடங்கியபோது அங்கிருந்த ஒருவர் அனுமதி இல்லை என்று கூறி பிரச்சினை செய்தார். அதையும் சமாளித்து, முதல் காட்சியை சுமார் அரை மணி நேரத்திற்குள் மிக வேகமாக படமாக்கிவிட்டோம். இப்படிப் பல சவால்களைத் தாண்டித்தான் இந்தப் பாடல் உருவாகியிருக்கிறது. இந்தப் பாடலுக்காக இவ்வளவு சிரமப்பட்டு உழைத்திருக்கிறோம். ஆனால் இப்போது இந்தப் ப்ராஜெக்ட் வெற்றியடைவது உங்கள் கையில்தான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. தனிப்பட்ட முறையில் சீது மாஸ்டரும் ஜானி மாஸ்டரும் எனக்கு மிகப்பெரிய குருநாதர்கள். நான் எந்த நிகழ்ச்சியைச் செய்தாலும், “சசி ஏதாவது செய்கிறாரா? சரி, பிரச்சனை இல்லை, நான் வருகிறேன்” என்று முதல் ஆதரவைத் தருபவர்கள் அவர்கள். அதேபோல் தாய்த்ரியா, ஆட்டோ, டுவா, மாலிஷ்வர் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

admin

admin

Related Posts

‘தாய் நிலம்’ – விமர்சனம்!
News

‘தாய் நிலம்’ – விமர்சனம்!

by admin
October 8, 2026
பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்! ரஜினி,கமல் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்!!
News

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்! ரஜினி,கமல் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்!!

by admin
October 8, 2026
‘ஹைக்கூ’வின் ரொமான்டிக் காமெடி திரைப்பட  டிரெய்லர் வெளியானது!
News

‘ஹைக்கூ’வின் ரொமான்டிக் காமெடி திரைப்பட  டிரெய்லர் வெளியானது!

by admin
October 8, 2026
‘அன்பில் அவன்’ திரைப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு! படக்குழுவினர் மகிழ்ச்சி!
News

‘அன்பில் அவன்’ திரைப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு! படக்குழுவினர் மகிழ்ச்சி!

by admin
October 8, 2026
தங்கம் வென்ற தடகள வீராங்கனைக்கு நடிகர் தனுஷ்  பாராட்டு !
News

தங்கம் வென்ற தடகள வீராங்கனைக்கு நடிகர் தனுஷ் பாராட்டு !

by admin
October 7, 2026

Recent News

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் !

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் !

October 8, 2026
பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்! ரஜினி,கமல் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்!!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்! ரஜினி,கமல் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்!!

October 8, 2026
‘ஹைக்கூ’வின் ரொமான்டிக் காமெடி திரைப்பட  டிரெய்லர் வெளியானது!

‘ஹைக்கூ’வின் ரொமான்டிக் காமெடி திரைப்பட  டிரெய்லர் வெளியானது!

October 8, 2026
‘அன்பில் அவன்’ திரைப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு! படக்குழுவினர் மகிழ்ச்சி!

‘அன்பில் அவன்’ திரைப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு! படக்குழுவினர் மகிழ்ச்சி!

October 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?