Saturday, October 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவான முதல் தமிழ் படம், ‘அமெரிக்க ஆவி’!

admin by admin
October 10, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கத்தில் நெப்போலியன் நடித்துள்ள, முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவான முதல் தமிழ் படமான ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதன் முழு விவரம் இதோ.

ஜீவன் பிலிம்ஸ் (Jeevan Films) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கத்தில், மூத்த நடிகர் நெப்போலியன் முதன்மையான வேடத்தில் நடித்துள்ள ‘அமெரிக்க ஆவி’ (America Aavi)  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட (Trailer) வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், இப்படத்தின் இசைத் தட்டை சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணைத் தூதரான திரு. டாக்கா ஹாசி (Taka Hasi) மற்றும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து அதிகாரப்பூர்வமாக வெளியிட, அதனைப் பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார்.

You might also like

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நியூயார்க் ஐநா தலைமையகத்தில் உலக பருத்தி தினம்: எல்.கே. சுதீஷ் உரை!

மாதவிடாய் காலப் பராமரிப்பை தற்காலிகமாகக் கருத்தில் கொள்ளாதீர்கள்! – சமந்தா பேச்சு!

முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே படமாக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமிதத்துடன் தயாராகியுள்ள இப்படம், ஒரு காமெடி ஹாரர் த்ரில்லர் (Comedy Horror Thriller) ரகப் படமாகும். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் நெப்போலியனுடன், 200-க்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் தமிழ் மற்றும் சர்வதேசப் புதுமுக நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இதில் நடித்திருக்கும் அனைவரும் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர்கள், டாக்டர்கள், சயின்டிஸ்ட்கள், மற்றும் பல்கலைக்கழகப் புரொபசர்கள் எனப்  புகழ் பெற்ற சர்வதேச நிறுவனங்களில் மிகவும் உயரிய பொறுப்புகளில் பணியாற்றி வருபவர்கள் ஆவர். திங்கள் முதல் வெள்ளி வரை அவர்கள் தங்களது அலுவலக வேலைகளில் பிஸியாக இருந்தாலும், வார இறுதி நாட்களில் ஒதுக்கித் தந்த ஓய்வு நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டு, ஏறத்தாழ 75 நாட்களில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் நடத்தி இந்தத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்தியத் தமிழர்கள் மட்டுமின்றி, ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு அறிமுக நடிகர்களும் இதில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் குணால் நெப்போலியன்,

“‘அமெரிக்க ஆவி’ என்ற டைட்டிலைக் கேட்டவுடன் ஆவி என்றால் நாம் வெறும் பேய் என்று மட்டுமே பொதுவாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தத் திரைப்படத்தில் ரசிகர்கள் ரசிக்கும்படியான பேய் மற்றும் பிசாசு காட்சிகள் இருக்கின்றன. அதே தருணத்தில், அமெரிக்காவைப் பொறுத்தவரை ஆவி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கு வந்து குடியேறி, தங்களது அசாத்திய உழைப்பால் வெற்றியை நோக்கித் தொடர்ந்து பயணித்து, இறுதியில் சாதித்துக் காட்டும் மனிதர்களின் உன்னத முயற்சியையும், அவர்களது மன உறுதியையும் குறிக்கும் ஒரு குறியீடாகவும் இந்த ஆவி என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் பேசுகையில்,

“நான் ஏற்கனவே தமிழ் சினிமாவில் ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியிருந்தேன். அதன் பிறகு குடும்பச் சூழல் காரணமாக அமெரிக்காவிற்குச் சென்று செட்டிலாகி விட்டேன். அங்கு நெப்போலியன் சாரைச் சந்தித்து ஒரு கதையைச் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அமெரிக்காவில் உள்ள தனது மகன்களை விட்டுவிட்டு வெளியில் வந்து நடிக்க முடியாது என்றார். அதே தருணத்தில், அமெரிக்காவிலேயே ஒரு புதிய படத்தை உருவாக்க முடியுமா எனக் கேட்டார். அப்போது அவர் புதிதாக வாங்கியிருக்கும் வீட்டை எனக்குச் சுற்றிக் காண்பித்தார். அது சுமார் மூன்றரை ஏக்கர் பரப்பளவில், மரங்களுக்கு நடுவே அழகாக அமைந்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான பங்களா வீடு. அதைப்பார்த்த உடனே ஹாலிவுட்டின் பிரபல ஆங்கிலத் திரைப்படங்களில் வரும் மர்ம பங்களாக்கள் தான் நினைவுக்கு வந்தன. அந்த வீட்டை மையக் களமாகக் கொண்டு ஒரே வாரத்தில் இந்த கதையைத் தயார் செய்தேன். அந்த கதையை நெப்போலியன் சார் மற்றும் அவரது மகன்களான குணால் – தனுஷ் என அனைவரும் ஒன்றாக இணைந்து அட்டகாசமான விறுவிறுப்பான திரைக்கதையாக மாற்றினோம்” என்றார்.

ஒளிப்பதிவாளர் ‘நேஷ் வில்’ பிரபு பேசுகையில்,

“என்னுடைய முழு பெயர் பிரபு தொப்புடு அமரேசன். எனது தாத்தா டி.எஸ். அமரேசன், நாடக உலகின் ஜாம்பவான் ஆர்.எஸ். மனோகர் நடித்த பல புகழ்பெற்ற பிரம்மாண்ட மேடை நாடகங்களை இயக்கிய இயக்குநர் ஆவார். நான் சென்னையில் இருந்த காலகட்டத்தில், முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா மற்றும் இயக்குநர் அறிவழகன் ஆகியோருடன் ஒரே அறையில்தான் தங்கி இருந்தேன். அவர்களின் மூலம் கேமரா லென்ஸ்கள் மற்றும் தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு அமெரிக்காவிற்குச் சென்றபோது, அங்குத் தமிழர்கள் நடத்தும் சிறிய கலை நிகழ்வுகளை எனது கேமரா மூலம் பதிவு செய்யத் தொடங்கினேன். அந்தத் தருணத்தில்தான் எனக்கு நெப்போலியன் சாருடன் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் விசேஷ நிகழ்வுகளுக்கு கேமரா மேனாக இருந்தேன். ஜப்பான் நாட்டில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற தனுஷின் திருமண நிகழ்வை முழுமையாகப் பதிவு செய்யும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. அப்படி என்னை ஒவ்வொரு கட்டத்திலும் படிப்படியாக மெருகேற்றி, தற்போது ‘அமெரிக்க ஆவி’ படத்தின் மூலம் என்னை அதிகாரப்பூர்வ ஒளிப்பதிவாளராக நெப்போலியன் சார் அறிமுகப்படுத்தி இருக்கிறார்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைக்க, வினு படத்தொகுப்புப் பணிகளையும், இந்து ராஜ்குமார் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

admin

admin

Related Posts

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
News

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

by admin
October 10, 2026
நியூயார்க் ஐநா தலைமையகத்தில் உலக பருத்தி தினம்: எல்.கே. சுதீஷ் உரை!
News

நியூயார்க் ஐநா தலைமையகத்தில் உலக பருத்தி தினம்: எல்.கே. சுதீஷ் உரை!

by admin
October 10, 2026
மாதவிடாய் காலப் பராமரிப்பை தற்காலிகமாகக் கருத்தில் கொள்ளாதீர்கள்! – சமந்தா பேச்சு!
News

மாதவிடாய் காலப் பராமரிப்பை தற்காலிகமாகக் கருத்தில் கொள்ளாதீர்கள்! – சமந்தா பேச்சு!

by admin
October 10, 2026
குமரன் தங்கராஜனின் ‘இறுதிப்பக்கம் 2’ அப்டேட்!
News

குமரன் தங்கராஜனின் ‘இறுதிப்பக்கம் 2’ அப்டேட்!

by admin
October 10, 2026
யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’  அக்டோபர் 30-ல் வெளியாகிறது!
News

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ அக்டோபர் 30-ல் வெளியாகிறது!

by admin
October 9, 2026

Recent News

முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவான முதல் தமிழ் படம், ‘அமெரிக்க ஆவி’!

முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவான முதல் தமிழ் படம், ‘அமெரிக்க ஆவி’!

October 10, 2026
நியூயார்க் ஐநா தலைமையகத்தில் உலக பருத்தி தினம்: எல்.கே. சுதீஷ் உரை!

நியூயார்க் ஐநா தலைமையகத்தில் உலக பருத்தி தினம்: எல்.கே. சுதீஷ் உரை!

October 10, 2026
மாதவிடாய் காலப் பராமரிப்பை தற்காலிகமாகக் கருத்தில் கொள்ளாதீர்கள்! – சமந்தா பேச்சு!

மாதவிடாய் காலப் பராமரிப்பை தற்காலிகமாகக் கருத்தில் கொள்ளாதீர்கள்! – சமந்தா பேச்சு!

October 10, 2026
குமரன் தங்கராஜனின் ‘இறுதிப்பக்கம் 2’ அப்டேட்!

குமரன் தங்கராஜனின் ‘இறுதிப்பக்கம் 2’ அப்டேட்!

October 10, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?