சீதக்காதி விஜய்சேதுபதி.

தலைக்கு கனம் ஏறாத வரைதான்  அவன் மனிதன். 

 தான் என்கிற அகம்பாவம் உட்கார்ந்து விட்டால் அவன் ஏதோ ஒரு வகையில்  ஒன்றை இழந்தவனாகி விடுகிறான். கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பு  கிடைக்கும்போது  “அந்த வாய்ப்புக்குரியவன் நானே “என கர்வம் கொள்ளாமல் ,நினைக்காமல்  எவனொருவன் அந்த வாய்ப்பினை நிறைவு செய்கிறானோ அவன் ‘ஆகச்சிறந்த கலைஞன் ‘

விஜய்சேதுபதி! நடித்திருக்கும்படம் சீதக்காதி.

சீதக்காதியின் முதல் பார்வையான ‘மேக்கிங் ஆஃப் ஐயா’வை விஜய் சேதுபதி கொண்டாடும் நேரத்தில், தனது மகிழ்ச்சியை    வெளிப்படுத்தியிருக்கிறார்.
” சிவாஜி கணேசன் சார் அல்லது கமல்ஹாசன் சார் போன்ற லெஜண்ட் நடிகர்களுக்கு பொருத்தமான ஒரு படம் சீதக்காதி.. ஆரம்பத்தில், பாலாஜி தரணீதரன் இதில் நடிக்க தமிழ் சினிமாவின் சில பெரிய நடிகர்களை நினைத்திருந்தார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. கைகளில் வேறு எந்த ஆப்ஷனும் இல்லாமல், அவர் என்னை அதில் நடிக்க வைக்க விரும்பினார். இந்த படத்திற்கு செய்ய வேண்டியதை சரியாக செய்து உள்ளேன் என்று நான் நம்புகிறேன். 
நான் ஒரு 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறேன். சீதக்காதி ஒரு ஆத்மார்த்தமான படம்,  கலைக்கு முடிவே இல்லை, சாகாவரம் பெற்றது என்ற செய்தியை சொல்லும். அது யாரோ ஒருவரின் அல்லது மற்றொருவரின் மூலம் வாழும். என் 25வது படமாக இந்த அற்புதமான படம் அமைவதற்கு நான் மிகவும் பாக்கியவானாக இருக்கிறேன்” என்றார்.