விஷாலின் அரசியல் இயக்கம்!

கட்சி ஆரம்பிக்க ஆண்டவனைக் கேட்டார் ஒருத்தர். முழு அளவில் ஆண்டவன் ( ஆள்பவர்,) அனுமதிக்கவில்லை போலும். ரசிகர்கள் துவண்டு விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது அறிக்கைகள் விடுகிறாரோ என்று கூட நினைக்கத் தோன்றியது. கரை வேட்டி கட்டக்கூடாது, கொடியை கட்டிக்கொண்டு காரில் செல்லக்கூடாது என்பதைப் போன்ற காமடிகள் இல்லாமல் கட்சியைத் தொடங்கி ஆண்டுவிழாவை நெருங்கி விட்டார் கமல்ஹாசன். ஆனால் இடைத் தேர்தல் வரை வந்தவர் விஷால். வேட்பு மனுவை ஓகே செய்து விட்டு வீட்டுக்குப் போனதும் ‘ரிஜக்ட் ‘ என்று செய்தி அனுப்பப்பட்டதும் இவருக்குத்தான்! தேர்தல் கமிஷன் என்பதே தமிழ் நாட்டில் காமடி பீஸ்தானே ! ஆளும் கட்சிகளின் கைபாணமாக இருக்கவேண்டும் என்பது இந்தியாவின் தலையெழுத்தோ என்னவோ!  

இன்று விஷாலின் பிறந்த நாள்.கலைவாணர் அரங்கத்தில் ரசிகர்கள் ஆடித் தீர்த்து விட்டார்கள்.  இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. 

மக்கள் நல இயக்கம் என்பது விஷாலின் இயக்கத்தின் பெயராக அறிவிக்கப்பட்டது. கொடியின் படத்தை இங்கே பார்க்கலாம்.ஒரு காலத்தில் கட்சிக்கொடியை தனது தயாரிப்புப் படங்களில் காட்டினார் எம்.ஜி.ஆர். அதைப்போல இவரும் காட்டுவர் என நம்பலாம்.