ஆணவக் கொலைப் படம் என்றால் அண்டர்வேர் வேர்க்கும் அளவுக்கு ஆவேசமாகிவிடுகின்றன சில சாதிய கட்சிகள்.
லக்சரி ஹோட்டல்களில் ரூம் போட்டு டைரக்டரையும் தயாரிப்பாளரையும் மிரட்டி முடிந்த அளவுக்கு வரவு வைத்துக் கொண்டு சாதியை பற்று கணக்கில் முடித்து விட்டு போய் விடுகிறார்கள். தயாரிப்பில் இப்போதுதான் பிள்ளையார் சுழி போட்டுள்ள ஜெய்சந்திரா சரவணக்குமாரின் படம்தான் ’தொட்ரா’.
தன்னுடைய வீட்டில் ஒரு ஹீரோ இருக்கிறார் என்பதையும் மறந்து கேரக்டருக்கு சூட்டான ஆள் பாண்டியராஜனின் பையன் பிருத்விராஜ்தான் என தன்னுடைய சீடரான மதுராஜிடம் சொல்லி ஹீரோவை முடிவு செய்தவர் பாக்யராஜ். இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியஇருப்பவர் மதுராஜ்.. பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர் இந்தப்படத்தில்,வீணாவின் அண்ணனாக, முக்கிய கேரக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திராவின் கணவர் .. இவர்களது கல்யாணமே தனிப் படமாக எடுக்குமளவுக்கு சுவையானது.
இயக்குனர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோரும் நடித்துள்ளனர். உத்தமராசா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.. வி.செந்தில்குமார் ஒளிப்பதிவு .
படத்தை பார்த்த சந்திரா, தனது கணவரின் நடிப்பை பார்த்துவிட்டு ‘ஐ லவ் யூ’ என மெசேஜ் அனுப்பிஇருக்கிறார். காதல் கணவரிடம் இந்த பனிரெண்டு வருட தாம்பத்யத்தில் ஒருமுறை கூட ஐ லவ் யூ சொல்லியிராத இவரை, கணவரின் நடிப்பு ‘லவ் யூ’ சொல்லும் அளவுக்கு பிரமிக்க வைத்துவிட்டது என்கிறார்.
இசையமைத்துள்ள உத்தமராசா அடிப்படையில் டிராக் பாடகரான இவர் ஒரு பிரபல இசையமைப்பாளரிடம் உதவியாளராக பணியாற்றியவர். பொதுவாக இசையில் தன்னுடைய குரு யாரென்று சொல்ல சிஷ்யர்கள் தயங்கமாட்டார்கள். ஆனால் உத்தமராசா தனது குருவின் பெயரை சொல்லவே விரும்பவில்லை. அந்தளவுக்கு, தனது சிஷ்யர்கள் நன்றாக முன்னேறுவதை காண சகிக்காத ஆசாமி. உத்தமராசாவுக்கே வெளிச்சம்.