67 வயது ,மம்மூட்டியின் மறக்கமுடியாத படங்கள்.

கேரளத்தில் இளைய தலைமுறை நடிகர்கள் எத்தனையோ பேர் வந்தாலும் மம்மூட்டி அளவுக்கு அவர்களுக்கு கேரக்டர்கள் அமைவதில்லை.
அங்கு தமிழ்நாட்டைப் போல கமர்சியல் படங்கள் எடுப்பதில்லை. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மம்மூட்டிக்கு 67 வயது. தனது வயதுக்குத் தகுந்த கேரக்டர்களை மட்டுமே செய்து வருகிறார்.
அவரது படங்களில் எத்தனையோ முத்தானவை இருந்தாலும் ‘விதேயன்’ படத்தை மறக்க முடியாது. பாஸ்கர பட்டேலா என்கிற கொடுமையான பண்ணையாராக நடித்திருந்தார்,
அடுத்தது பிரபல எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரின் மதிலுக்குள் என்கிற படம். .அற்புதமாக நடித்திருந்தார். தேசிய விருது வாங்கித் தந்தது.
இன்னுமொன்று குறிப்பிடலாம் பாபா ஷாகேப் அம்பேத்கர் .படம். இந்த படமும் இவருக்கு நேஷனல் அவார்டை வாங்கித் தந்தது.