முற்றிலும் மாறுபட்ட விக்ரம் பிரபு.

தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன..?? பெற்றது என்ன..?? என்பதே இந்த “துப்பாக்கி முனை”யின் கதை சுருக்கம்.. மேலும் போலீஸ் அதிகாரி பிர்லா போஸை கதாபாத்திரத்துக்காக நரைமுடி தலையுடன் 45 வயது தோற்றத்தில் விக்ரம்பிரபு சிறப்பாக நடித்திருப்பதாகவும், படத்தின் கதையும், விக்ரம்பிரபுவின் வித்யாசமான தோற்றமும் படத்தின் பெரும்பலம் என்று இயக்குனர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்..
படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் கிரீஸ் நாட்டில் உள்ள மெக்கடோனியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. “கபாலி” “வி.ஐ.பி 2″படங்களுக்கு பிறகு “துப்பாக்கி முனை” படத்தின் இசைக்கோர்ப்பு அங்கு நடைபெறுவது குறிப்படத்தக்கது..
இந்தியாவில் மிகச்சிறந்த கதாசிரியர்களில் ஒருவரான “அன்னக்கிளி”ஆர்.செல்வராஜின் மகனும், மணிரத்னத்தின் இணை இயக்குனரான தினேஷ் செல்வராஜ் இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவரும் இந்த திரைப்படத்தினை வி.கிரியேசன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.