பக்கமாக ஆள் இருந்தும் ஃபாரீன் பறக்கலாமா?

‘வானத்து முழுமதியோ ?
மாநிலத்து ஊர்வசியோ?
மதி மயக்கும் கற்பனையோ?
கற்பனையின் முடிவுரையோ?
சித்திரப்பாவையம்மா!—உன் முகம் ,
சீதக்கமலமம்மா! ‘
கவியரசர் என்னமாய் பாடுகிறார். அவர் பாடியிருக்கும் வரிகளுக்கு அழகாகப் பொருந்துகிறார் ஸ்வீட்டி அனுஷ்கா.
பாழாய்ப்போன படமொன்றில் பருமனாக தோன்றவேண்டும் போட்ட உடம்பு!
இளைப்பதற்காக என்னவெல்லாமோ செய்தார். பாவி உடம்பு இளைக்கவில்லை. கற்ற யோகாவும் கை கொடுக்கவில்லை. மீண்டும் ஃ பாரீன் பயணம்.
“ஏம்மா, முன்னுதாரணமாக பக்கமாக நான் இருக்கிறேன்.எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன் எனச் சொல்கிற அளவுக்கு இளமையாக இளைத்திருக்கிறேன். என்னிடம் ஆலோசனை கலக்கக்கூடாதா?”
இசை அமைப்பாளர் டி.இமானின் மனம்தான் இப்படி கேட்கிறது.
யாராவது அனுஷ்காவிடம் சொல்லக்கூடாதா?