மீ டூ நடிகையின் குற்றச்சாட்டும் பல்டியும்.!

போகிற போக்கில்  நாமும் ரெண்டு  கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன  என்கிற மனநிலைக்கு வந்து விட்டார்களோ ,என்னவோ?  சங்கீதா பட் என்கிற  நடிகை  ‘லொள்ளு சபா, ஆரம்பமே அட்டகாசம் ‘என  இரண்டு படங்களில் நடித்திருந்தார். கன்னடத்து ரோஜா. 

திடீரென  ஒரு  செய்தி.

“நான்  15 வயசில  இருந்தப்ப ஒரு டைரக்டர்  சான்ஸ் தருவதாகச்சொல்லி  காரில்  கூட்டிப் போனார். காரில் வைத்து  தப்புத்தப்பா  நடந்துக்கிட்டார். மனசு உடைஞ்சிட்டேன். தமிழில் ஒரு படத்தில் நடித்த போது ஒரு நடிகர் பைக்கில் கூட்டிச்செல்வது போல ஒரு காட்சி.

திடீரென பைக்கை  நிறுத்திவிட்டு நீ என்ன பிராண்ட் இன்னர் வேர்  போட்டிருக்கேன்னு  கேட்டார் “என்பதாக பதிவு செய்திருந்தார்.

நெட்டிசன்ஸ்  நெம்பித் தள்ளிவிட்டார்கள். “பொத்தாம் பொதுவில் புகாரை வைக்காதே ,யார் அந்தாளு?சொல்லு”என  வறுத்து எடுக்கவே   சங்கீதா  “நான்  இப்ப நடிக்கல. அவரு பேரை சொல்ல வேண்டிய அவசியமும் இல்ல. சினிமாவை விட்டு விலகிட்டேன்” என்று எஸ்கேப் ஆகிவிட்டார்.

இப்படியும் சிலர்  தவறாக  சோசியல் மீடியாவை  பயன் படுத்துகிறார்கள்.