“ஷ்யூர் ஷாட் …ஒரே அடிதான்!” ரஜினி பூரிப்பு.!

ஒரு வழியாக ஷங்கரின் பிரமாண்டமான ‘டூ பாயின்ட் ஓ’ டீசர் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.
ஷங்கரின் கற்பனைக்குப் பொருந்திப் போகிற நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஒருவர். இன்றைய விழாவுக்கு மனைவியுடன் வந்திருந்தார்.
விழாவில் பேசிய ரஜினி மனம் விட்டு சில கருத்துகளை சொன்னார். அதில் அவரின் உடல்நலம் சார்ந்ததும் இருந்தது.
” தொடக்கத்தில் உடல் நலம் சரியல்லை. பதினெட்டுக் கிலோ எடையை சுமந்து நடிப்பது மன ரீதியான பாதிப்பை கொடுத்தது. என்னால் நடிக்க முடியாது. வாங்கிய பணத்தைக் கொடுத்து விடுகிறேன் .இதுவரை ஆன செலவையும் கொடுத்து விடுகிறேன் ஆளை விடுங்கள் என சொன்னேன்.
“இல்லை சார் நீங்கள்தான் நடிக்க வேண்டும் “என்று ஷங்கர் கேட்டுக் கொண்டார்.
தயாரிப்பாளர் சுபாஸ்கரன் என் கையைப் பிடித்து தனி அறைக்கு அழைத்து சென்றார். நாலு வருஷம் ஆனாலும் நீங்கள்தான் நடிக்கிறீர்கள் ,தைரியமாக இருங்கள் என்று சொன்னார்.படம் நல்லா வந்திருக்கு. லேட்டா வந்தாலும் ( சற்றே இடைவெளி விட்டு ) கரெக்ட்டான நேரத்தில் வந்திருக்கிறோம். ( கைதட்டல்,விசில் தியேட்டரை கிழித்தது.) ஷ்……யூ……ர் ஷாட்! ஒரே …அடி! ( சிரித்தபடி ) நான் அரசியலை சொல்லல . படத்தை பத்தி சொன்னேன்” என்றார்.