கோமளவல்லி வரு ஏற்படுத்திய பரபரப்பு.

தளபதி விஜய் படம் என்றாலே பரபரப்பு தவுசன்ட்வாலா ரேஞ்சுக்கு எகிறும். ஜெயலலிதாவின் அசல் பெயரை சர்க்கார் படத்தில் வைத்து அதிமுகவில் பிரளயத்தை உண்டாக்கினார்கள், விஜய்யின் பேனர்களை உடைத்து ஆத்திரம் அடக்கினார்கள் ,மறு தணிக்கை என சொல்லி கோமளவல்லி பெயரை மியூட் பண்ணினார்கள். 
ஆனால் இதற்கெல்லாம் அஞ்சுகிறவர்கள் அவரது ரசிகர்கள் இல்லையே? இலவச வீட்டையே இடிக்கிற அளவுக்கு கோபத்துடன் இருக்கிறார்கள்.
“எனக்கு சிம்புவை ரொம்பவும் பிடிக்கும்”என்கிற வரலட்சுமிசரத்குமார் சர்கார் வெற்றி விழா பார்ட்டி புகைப் படத்தை பிரசுரித்து “கோமளவல்லி ஊஊஊ”என கமென்ட் அடித்திருக்கிறார்.