பி.எஸ்.வீரப்பாவின் மகன் பி.எஸ்.வீ.ஹரிஹரன் மரணம்!
மறைந்த நடிகரும், தயாரிப்பாளருமான பி.எஸ்.வீரப்பா மகாதேவி, மன்னாதி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், மீனவ நண்பன் போன்ற படங்களில் வில்லான நடித்து புகழ்பெற்றவர். பின் பல படங்களை பி.எஸ்.வி பிக்சர்ஸ் பேனரில் தயாரித்தார்.பி.எஸ்.வீரப்பாவின் மகன் பி.எஸ்.வீ.ஹரிஹரன் என்பவரும் தயாரிப்பாளர் தான். ஆனால் பி.எஸ்.வீரப்பாவின் மறைவுக்குப் பிறகு, படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்.ஏராளமான படங்களில் நடித்துச் சம்பாதித்த பணத்தை, படத் தயாரிப்பில் வீரப்பா இழந்துவிட்டார். இதில் வாடகை வீட்டில் வசித்து வந்த வீரப்பாவின் மகன் பி.எஸ்.வி.ஹரிஹரனுக்கு, பொருளாதாரப் பிரச்சினை காரணமாக வாடகையைக் கூடச் செலுத்த முடியாத நிலை உருவானது இதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தாமாகவே முன்வந்து ரூ.1 லட்சத்துக்கான வரைவோலையை பி.எஸ்.வி.ஹரிஹரனுக்குக் கொடுத்து உதவியுள்ளார். அதனை பி.எஸ்.வி.ஹரிஹரன் வசிக்கும் முகலிவாக்கம் வீட்டுக்கே சென்று கலைப்புலி தாணு சார்பில், டைமண்ட் பாபு மற்றும் சிங்காரவேலு ஆகியோர் வழங்கினர்.இந்நிலையில்,கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டில் தடுமாறி கீழே விழுந்தவருக்கு தலையில் அடிபட்டது உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் .2.15 மணியளவில் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார்.அவரது இறுதிச்சடங்கு நாளை காலை நடக்கிறது. பி.எஸ்.வி. ஹரிஹரனுக்கு ஆனந்தி என்ற மனைவியும்,ஜெய் குமார் என்ற மகனும் ,மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.அவரது உடலுக்கு திரையுலகினர் பலர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஹரிகரன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.