‘சன்’னை முந்திக் கொண்டு பாடலை முதலில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.!

தமிழ் ராக்கர்ஸ் அட்மினை கைது செய்து விட்டதாக ஒரு செய்தி.!
அடடே.. தமிழ்ச் சினிமா பொழைச்சிக்கும்பா என்று சற்றே ஆறுதல்.!
ஆனால் மரண மாஸ் அபீசியல் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே தமிழ் ராக்கர்ஸ் அந்த பாடலை வெளியிட்டு விட்டார்களாம். என்னடா இது சோதனை!
தமிழ்ச்சினிமாவின் ஹேமநாத பாகவதராக மிரட்டிக் கொண்டிருக்கிறது ராக்கர்ஸ்.
வெட்ட வெட்ட தலை முளைத்த பாட்டி கதை மாதிரி ஆகி இருக்கிறது. அட்மினை கைது பண்ணி விட்டதால் அடங்கிவிடும் ஆட்டம் என்று பார்த்தால் அதிர்வேட்டாக கிளம்புகிறது ராக்கர்ஸ். இதுக்கு என்னதான் வழி?
படங்களை வெளிநாட்டுக்கு விற்பனை செய்வதால்தான் பைரசியே வருகிறது என்கிறார்கள். உண்மை இல்லாமல் போகுமா? தெரியலிங்க,!