மாட்டு வண்டியில் அமிதாப்பச்சன்!

மாட்டு வண்டியில் அமிதாப் என்றதும் அடடா என்னே எளிய வாழ்க்கை என்று நினைத்து விடாதீர்கள். எல்லாம் சினிமாவுக்காகத்தான்! இதற்காக அரசாங்க பஸ்சில் கூட பயணம் செய்திருக்கிறார்.நல்ல வேளை அவர் அரசியல்வாதியாக இல்லை.ஆகி இருந்தால் இதையும் கட்சிக்காரர்கள் பயன் படுத்திக் கொள்வார்கள்.ஏழையின் பங்காளன் என பட்டம் சூட்டி விழா எடுத்திருப்பார்கள்.அவரின் ரசிகர்களும் உயர்வானவர்கள்தான்!