கமல் விருப்பத்தையும் தாண்டி அனிருத் எப்படி உள்ளே புகுந்தார்? ரஜினியின் தலையீடா?

இயக்குநர் ஷங்கரின் படம் என்றால் இசைஏஆர்.ரகுமான்தான் என்பது வழக்கமாக இருந்தது.
அதை மீறி ரஜினியின் நெருங்கிய உறவினர் என்பதால் வாய்ப்பு வழங்கப்பட வேண்டிய நிலை.
பேட்ட யின் கட்டாயம் ஷங்கரையும் விரட்டியது.
இந்தியன் 2 -ல் ரகுமான்தான் இசை அமைக்கவேண்டும் என்பது உலகநாயகன் கமலின் ஆசை!
ஆனால் அடுத்த படத்துக்கு ரஜினியின் கால்ஷீட் தேவைப்படும் என்கிற நிலையில் லைகா இருப்பதால் ரஜினியின் மனைவியின் தரப்பினர் நெருக்கடி கொடுத்ததாக சொல்கிறார்கள்.
இதனால் அனிருத் உள்ளே வந்திருக்கிறார் .
“வேறு சில படங்களுக்குக் கூட ஷங்கரின் படங்களுக்கு நான் இசை அமைக்கவில்லை.இது சின்ன இடைவெளிதான். சரியாகி விடும்”என்கிறார் ரகுமான்!
அரசியலுக்கு வருவதற்கு முன்னரே வீட்டு அரசியல் ரிகர்சல் பார்க்கிறதா?