தமிழன்தான் ஆளவேண்டும். தமிழர் அல்லாதார் ஆள விட அவர்கள் என்ன இளிச்சவாயர்களா? பிரகாஷ்ராஜ் காட்டம்.!

காரம் பச்சை மிளகாயா, காய்ந்த மிளகாயா என்று கேட்டால் “எந்த மிளகாயும் இல்லைய்யா…பிரகாஷ்ராஜ்தான் காரம் அதிகம்.காட்டமாக இருக்கும்” என்கிறார்கள்.
அதிலும் மோடி என்றால் மூன்றாம் கண் நெற்றியில் பிறந்து விடும்.
ஒரு தனியார் தொலைக்காட்சியின் சாமர்த்தியமான செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு பதில் வெடிகளை கொளுத்திப்போட்டபடியே இருந்தார் பிரகாஷ்ராஜ்.
“என்னத்த சொல்றது? கருப்புப்பணத்தை ஒழிச்சிட்டாங்களா?
ஜி.எஸ்.டி யை பத்தி கேள்வி கேட்டா ஆன்ட்டி இன்டியன்னு சொல்லிடுறாங்க
பிஜேபி அரசு வந்து எது சரியா நடந்திருக்கு?அவங்களிடம் மதவெறி இருக்கிறவரை எதையும் சரியா பண்ண முடியாது.
மக்கள் செத்திட்டிருக்காங்க, 3000 கோடியில் சிலைன்னு திறந்து வைக்கிறாங்க, மோடி விதம் விதமா போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரு தொப்பி இந்த ஊரு தொப்பின்னு போட்டு ஸ்டைல் காட்டுறார்.மாடல்ஸ்தான் இந்த மாதிரி எல்லாம் போஸ் கொடுப்பாங்க.
நான் பெங்களூரு மத்திய பாராளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்.நான் பிறந்து வளர்ந்தது அங்கதான்.அந்த தொகுதியில்தான் தமிழர்கள், ஆந்திரர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என்று கலந்து இருக்கிறார்கள் என்னை அடையாளம் காட்டியது தமிழ்நாடுதான்.
நான் சுயேச்சையாக நிறைய கேள்விகள் கேட்கமுடியும். கேட்கக்கூடாதா? நான் கேட்பேன்.நான் பிழைக்க வரல.வாழ வந்திருக்கேன். நான் இந்த நாட்டு குடிமகன்,நான்தான் ஹீரோ.மோடிதான் வில்லன்.
மிரட்டல்கள் நிறைய வருது.நான் பயப்படுற ஆள் இல்ல. தமிழ்நாட்டை ஆள்வதற்கு தமிழன்தான் வேண்டும்.வேற ஆளை ஆள விடுவதற்கு தமிழர்கள் என்ன இளிச்சவாயர்களா?
இங்கே மோடி கால் வைக்கமுடியாது. ஹெலிகாப்டர்லதான் போக முடியிது.
எடப்பாடி ஆட்சி பற்றி கேட்கிறீங்களா? ஆட்சியாங்க இது?அது ஒரு கவர்மென்ட்டா? குற்றவாளின்னு அடையாளம் காட்டப்பட்ட ஒருத்தர் படத்தை காட்டி ஏமாத்திட்டிருக்காங்க!”
இப்படி காரசாரமாக பேசி இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.