ஜே.கே.ரித்தீஷ் மரணம்.

பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜே.கே.ரித்தீஷ் இன்று பிற்பகல் மாரடைப்பினால் இயற்கை அடைந்தார்..46 வயது. மனைவி ஜோதீஸ்வரி. சொந்த ஊர் ராமநாதபுரம்.
இவர் கடைசியாக நடித்து வெளிவந்த படம் எல்.கே.ஜி.
அதிமுக அணியில் உள்ள அவர் தனது தொகுதியான ராமநாதபுரத்தில் உள்ள போகளூரில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக இன்று காலை பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
தற்போது ஜே.கே.ரித்தீஷ் உடல் ராமநாதபுரம் சேதுபதி நகரிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கங்களில் முக்கியமானவராக இருந்தார்.திமுக,அதிமுக ஆகிய கட்சிகளிலும் இருந்திருக்கிறார்.
இவரது மறைவுக்கு திரை உலகம் சார்பில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.