ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளும் நடிக்க வருகிறார்!

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், கடந்த ஆண்டு வெளியான ‘தடக்’ என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த நிலையில் தற்போது அவரது இரண்டாவது மகள் குஷிகபூரும் கதாநாயகியாக களமிறங்கஉள்ளாராம். இவரை பல திரையுலக பிரபலங்களின் வாரிசுகளை திரைபடங்களில் நடிகர்களாக, நடிகைகளாக அறிமுகம் செய்த பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண்ஜோஹர், குஷிகபூரையும் கதாநாயகியாக அறிமுகம் செய்ய உள்ளாராம்.குஷிகபூர் தற்போது நியூயார்க்கில் நடிப்பு பயிற்சிப்பள்ளியில் பயின்று வருவதாகவும், விரைவில் அவர் நடிக்கவிருக்கும் பாலிவுட் படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.