25 இயக்குனர்கள் துவக்கி வைத்த புதிய திரைப்படம் “நாயே பேயே”!

தனி ஒருவன், வழக்கு எண் 18/9, ஒரு குப்பை கதை உள்ளிட்ட பல  திரைப்படங்களில் எடிட்டராக பணிபுரிந்த கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் ஆகியோரது தயாரிப்பில் நடன இயக்குனர் தினேஷ் நடிக்கும்புதிய படம் “நாயே பேயே”
இத்திரைப்படத்தை, பல தேசிய விருதுகள் வென்ற குறும்பட இயக்குனர்
சக்திவாசன் எழுதி, இயக்குகிறார்.
நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். இவருடன் இணைந்து கதாநாயகியாக ஐஸ்வரியா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் தன்
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன்,அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில்
கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கின்றான்.
இந்தசூழலில், அவனுக்கு ஒரு பிரம்மாண்டமான ஐடியா உதிக்க, அந்த ஒரே ஒரு
ஜாக்பாட் திருட்டுடன், வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்கிறான்.
நாயைக் கடத்தும் நால்வர் தவறுதலாக பேயைக் கடத்திவிடுகின்றனர். பேயை சமாளிக்க முடியாமல் சிக்கித் தவித்து சின்னா பின்னமாவதை நகைச்சுவை கலந்து, ஹாரர் எஃபெக்ட்டில் மிகவும் சுவராஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் படமாக்குகிறார் இயக்குனர்.
நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர். ரகுநந்தன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.