ஜிப்ரான் இசையில் ‘கானா’ பாடல் பாடிய சிவகார்த்திகேயன்!
அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கி வரும் புதிய படம் சிக்ஸர்.இப்படத்தில் வைபவ், சதீஷ், பல்லக் லால்வானி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 6 மணிக்கு மேல் கண்ணு தெரியாமல் கஷ்டப்படும் நாயகன், என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கிறார் என்பதை நகைச்சுவை கலந்து கூறியுள்ளனர்.
Related Posts
பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ‘நீ எங்க வேனா கோச்சிக்கினு’ என்ற கானா பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் ஜிப்ரான் இசையில் பாடியுள்ளார்.