நயன்தாரா கலந்து கொண்ட ஜீ டி வி பரிசளிப்பு விழா…
தொலைக்காட்
சி என்பது மிகவும் வலிமையான ஆயுதம். மிகப்பெரிய இந்த ஆயுதத்தினால் குபேரர் ஆனவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறவர்களை ஆட்டிப்படைக்க முடியும் என்பதற்கு இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்திலும் உதாரணமாக இருந்து வருகிறார்கள்.
பெரும்பாலான தொலைக்காட்சிகள் நடத்துகிற திரையுலக பெஸ்ட் என்பது விருப்பு,வெறுப்பு கலந்த கலவையாக இருப்பது கண்கூடு. இத்தகைய சூழலில் ஜீ தமிழ் டி வி முதல் தடவையாக சிறந்த திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்திருக்கிறது.
இதற்காக ஜீ தமிழ் 5 பேர் கொண்ட தேர்வு குழுவை அமைத்தது . இந்த குழுவில் சுகாசினி மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன், பரத் பாலா, பரத்வாஜ் ரங்கன், கரு பழனியப்பன் ஆகியோர் இருந்தனர்.
இவர்கள் தேர்வுசெய்திருந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன்,கலைப்புலி தாணு,மக்கள் செல்வன் விஜயசேதுபதி, ஏஆர் ரகுமான்,வெற்றி மாறன்,தனுஷ்,நவாஜுதின் சித்திக் ,ராமயா கிருஷ்ணன் ,நயன்தாரா, சமந்தா,ஜி.வி.பிரகாஷ்,பார்த்திபன் யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் .
ஜீ டி வி யின் தீபக்,அர்ச்சனா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.பேரன்பு ராம் பார்த்திபன் ,வெற்றிமாறன் நயன்தாரா சமந்தா யோகிபாபு ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.