விஷ்ணுவர்தன் இயக்கும் முதல் பாலிவுட் படம், “ஷெர்ஷா” !
விஷ்ணுவர்தன் அடுத்ததாக பாலிவுட்டில் தன் முதல் படத்தை இயக்குகிறார். சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி ஆகியோரது நடிப்பில், உருவாகும் புதிய படம் “ஷெர்ஷா” . கார்கில் போர் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா வாழ்வை மையமாக கொண்டு உருவாகும் இப்படம், 2020 ஜூலை 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குநர் விஷ்ணுவர்தன் முதல்முறையாக முற்றிலும் வேறொரு ஜானரில், கார்கில் போரின் பின்னணியில் போர் நாயகனை வைத்து, உண்மைக் கதையை இயக்குவது அவருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் புது அனுபவம் தரக்கூடியது.
விஷ்ணுவர்தன் முதல்முறையாக ஹிந்தியில் இயக்கும் இப்படத்திற்கு சந்தீப் ஶ்ரீவஸ்தாவா கதை,திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.