மோடியின் அழைப்பை ஏற்று விளக்கேற்றிய நடிகர்,நடிகைகள்!
கொரோனா பாதிப்புக்கு எதிரானபோராட்டத்தில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற நோக்கத்தில்,பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ,’வருகிற 5ந்தேதி (இன்று) இரவு 9 மணிக்கு உங்கள் இல்லங்களில் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்து விடுங்கள். உங்கள் வீட்டின் வாசற்படியில் இருந்தோ அல்லது பால்கனியில் இருந்தோ, ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது உங்கள் மொபைல் போனின் டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நில்லுங்கள் என பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில்,பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இரவு 9 மணியளவில் விளக்குகள், மெழுகுவர்த்திகள் ஆகியவற்றை ஏற்றி இந்திய நாட்டையே ஒளிவெள்ளத்தில் பிரகாசமாக்கினர்.
பிரதமர் மோடி ஆளுயர குத்துவிளக்கை ஏற்றி தொடங்கி வைத்தார்.நடிகர் ரஜினிகாந்தும் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றார். 9 நிமிடங்கள் வரை அவர் தனது வீட்டின் முன்பு நின்று இருந்தார்.
மேலும் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன்பு கையில் டார்ச் அடித்தபடி பங்கேற்றார்.
மேலும், நடிகர் பிரபு,கௌதம்கார்த்திக்,தமன்னா தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த சிரஞ்சிவி ,
நாகார்ஜுனா.அமலா குடும்பத்தினர்மற்றும் தமன்னா உள்பட பலரும் பங்கேற்றனர்.