ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க படுமா? மத்திய மந்திரி பரபரப்பு பேட்டி!
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நாளுக்கு நாள் வைரஸின் தாக்கம் தீவிரமாகி வருகிறது.இந்நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்க படுமா?என்பது குறித்து மத்திய அமைச்சரவை குழு கூட்டம் இன்று காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.
Related Posts
இக் கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:”கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அமலில் உள்ள 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு குறித்த மக்களின் நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. உலகம் முழுவதும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சரியான நேரத்தில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும். எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அது மக்களின் நலன் சார்ந்தே இருக்கும்”.இவ்வாறு அவர் கூறினார்.