அபுதாபியில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை கதறல்.!

பாலிவுட் நடிகை மவுனி ராய் .இவர் மாடலாகவும் இருக்கிறார். கொரானா இவரை வேறு விதமாக போட்டுப்பார்த்து விட்டது. அபுதாபியில் உட்கார்ந்து கொண்டு அழாத குறையாக நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் விளம்பர படத்தின் படப்பிடிப்பு அபுதாபியில் நடந்தது. சில நாட்கள் மட்டுமே நடைபெறும் என்பதால் நான்கு நாட்களுக்கு மட்டுமே தேவையான உடைகளை மட்டுமே அவர் எடுத்துச் சென்றிருந்தார்
ஆனால் கொரானா தொற்று நோய் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்திரவு நடைமுறைக்கு வந்தது. இதனால் விமானப்போக்குவரத்து அடியோடு முடக்கப்பட்டது. உடனே திரும்பி விடுவோம் என்ற எண்ணத்தில்,வெறும் நான்கு நாட்களுக்கு தேவையான உடைகளோடு சென்ற நடிகை மெளனிராய், அபுதாபியில் கடந்த இரண்டு மாதங்களாக சிக்கி தவித்து வருகிறார்.
இது குறித்து மவுனிராய் கூறுகையில், ’இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் கனவில் கூட நினைத்து பார்க்கவே இல்லை . ஒவ்வொரு நாளும் விமானங்கள் எப்போது கிளம்பும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன் .என்றாலும்,இங்கு சில நண்பர்கள் தயவால் சற்று நிம்மதியாக இருக்கிறேன்.இருந்தாலும் இந்தியாவிற்கு எப்போது திரும்புவோம் என்கிற நினைவுகள் தான் மேலோங்கிவருகிறது.இந்த ஊரடங்கு எனக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நல்ல பாடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது எனக்கூறியுள்ளார்.