‘ஜூவாலா கட்டா’வுடன் விஷ்ணு விஷால் ‘திடீர்’ நிச்சயதார்த்தம்!
நடிகர் விஷ்ணுவிஷால் கடந்த 2011-ம் ஆண்டு ,தனது கல்லூரித் தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில்,இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் விஷ்ணு விஷால்.
(பழைய படம்) 
அந்த பதிவில், “கடந்த ஒருவருடமாக நானும் ரஜினியும் பிரிந்து வாழ்கிறோம். தற்போது சட்டப்பூர்வமாக விவாகரத்தாகியுள்ளது. என குறிப்பிட்டுஇருந்தார்.பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாகவே விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினி நட்ராஜை விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷ்ணு விஷாலும் ஜூவாலா கட்டாவும் தங்களின் காதலை,சமூக வலைதளபக்கத்தில் உறுதிப்படுத்தினர். விரைவில் திருமணம் என்றும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஜூவாலா கட்டாவுக்கு, தனது பிறந்தநாள் பரிசாக மோதிரத்தை அணிவித்து திருமண நிச்சயதார்த்தத்தை மிக எளிமையாக முடித்துள்ள விஷ்ணு விஷால், இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டு, புதிய வாழ்க்கையை தொடங்குவோம் என பதிவிட்டுள்ளார்.