
கங்கனாவின் ‘தலைவி’ஆட்டம் தொடங்கி இருக்கிறது.
ஜெயலலிதாவின் வரலாறு சொல்லும் படமாக தலைவி தயாராகிவருகிறது. இந்த படத்தில் ஜெ.வாக கங்கனா நடித்து வருகிறார். ஏ எல் விஜய் இயக்குகிறார்.
தற்போது கங்கனா சொந்த ஊரான மனாலியில் இருக்கிறார் .
விரைவில் தலைவி படப்பிடிப்புத் தொடங்கவிருப்பதால் மனாலியிலேயே டான்ஸ் ரிகர்சல் செய்து வருகிறார்.இவரது டான்ஸ் மாஸ்டர் பிரசன்னபாபுவுடன் பயிற்சியில் இருந்தபோது எடுத்துக்கொண்ட படத்தை வெளியிட்டிருக்கிறார்.பாடல் காட்சிக்கான ஒத்திகை பிருந்தா பரமேஸ்வரர் உதவியுடன் படமாக்கப்படுகிறது.












