சஞ்சய்தத் வீட்டில் தீபாவளி கொண்டாடிய மோகன்லால்!


மலையாளத்தில் சக்கை போடு போட்ட ஜீத்து ஜோசப்பின் திரிஷ்யம் படத்தை தொடர்ந்து, நடிகர் மோகன்லால், த்ரிஷயம் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்தவர்களே இதில் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இதை இயக்கியுள்ளார்.

கடந்த மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகின்றன.இந்நிலையில், நடிகர் மோகன்லால் தீபாவளி அன்று மும்பையில் உள்ள சஞ்சய் தத் வீட்டுக்குச் சென்றார்.

அங்கு சஞ்சய் தத் மற்றும் அவர் மனைவி மானியதா உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். அவர்களுடன் தீபாவளியை கொண்டாடிய மோகன்லால், அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுதற்போது குணமடைந்துள்ளார். இதையடுத்து சஞ்சய்தத் யஷ் நடிக்கும் கே.ஜி.எப் சாப்டர் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.