தனி விமானத்தில் ரஜினி! ஐதராபாத் பறந்தார்!!

ஐதராபாத்தில் டிசம்பர் 15-ம் தேதி ரஜினிநடித்து வரும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பணியாளர்கள் என அனைவருக்குமே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிப்பு வட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க ‘அண்ணாத்த’ படக்குழு முடிவு செய்துள்ளது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் இன்று ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.உடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுசும் சென்றுள்ளார்.இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.