மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி!

’தனி ஒருவன்’ ’வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன்ராஜா தற்போது ’தனிஒருவன் 2’ ம் பாகம் பட வேலைகளை கவனித்து வருவதாகவும், விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், இயக்குனர் மோகன் ராஜா தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தை இயக்க இருப்பதாக மோகன் ராஜா தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன்பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில்,, “மெகா ஸ்டார்  சிரஞ்சீவியின் 153வது படத்தை இயக்குவதற்கு தனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி என்றும்,. என்னுடைய பெற்றோர்கள் மற்றும் நலவிரும்பிகளின் ஆசியால் தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

இப்படம் மலையாளத்தில் சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில்,சூப்பர் ஹிட்டடித்த லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் என்றும், வரும் 2021- ம் ஆண்டுஜனவரியில் இப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது நடிகர் சிரஞ்சீவி ’ஆச்சாரியா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.