சிங்கப்பூர் செல்கிறார் ரஜினிகாந்த்?

அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரானா வந்ததால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ரஜினிகாந்துக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் ஹைதராபாத்தில் இருக்கிற அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு உயர் ரத்த அழுத்தம் சீராக இல்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் ரஜினிகாந்த் என்பதால் அவருக்கு மிகவும் சக்தி வாய்ந்த மருந்துகள் கொடுப்பதை டாக்டர்கள் தவிர்த்தனர் .
சாதாரண முறையில் சிகிச்சை அளித்து ரத்த அழுத்தத்தை சீராக செயல்பட வைத்தனர்.
இன்று மாலை தனி விமானத்தில் சென்னைக்கு ரஜினி அழைத்து வரப்படுவார் என்கிறார்கள்.
அவருக்கு எத்தகைய சிகிச்சை மேற்கொள்ளப் படவேண்டும் என்பதை சென்னை அப்போலோ மருத்துவ மனை முடிவு செய்யும்.
ரஜினிகாந்தின் குடும்பத்தினர் அவரை சிங்கப்பூர் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.
சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தவர்களுக்கு சிறந்த மருத்துவம் அங்கு கிடைக்கிறது.
ரஜினிக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதற்கு காரணம் சிறுநீரகத்துக்கு செல்லவேண்டிய போதிய ரத்தம் சீராக செல்லவில்லை என்கிறார்கள். இதற்கு ‘ரெனோவாஸ்குலர் ஹைபெர்டென்சன்’ என்கிறார்கள் .