ஸ்டண்ட் மாஸ்டர் டான்ஸ் மாஸ்டர் ஆன கதை!



கொரொனாவால்  உலகம் முழுக்க குழந்தைகளின் எதிர்காலம் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதை நாம் கவனிக்கத்  தவறிவிட்டோம்.  பள்ளி வாழ்க்கையில் அவர்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய கல்வியைத்தாண்டி நட்பு  விளையாட்டு மற்றும் அவர்களது காலத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனுபவங்கள் பெருமளவு கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன. நாங்கள் உருவாக்கியிருக்கும் இசைப் பாடல்  கிட்ஸ் (எதிர்) கொரோனா. ஸ்டண்ட்  மாஸ்டர் சில்வா,  டான்ஸ் மாஸ்டராக மாறி சிறப்புத்தோற்றத்தில் குழந்தைகளுடன் ஆடிப்பாட,   பிரபஞ்சத்தை காக்கும் பேரிசை மூலம் இந்த உலகுக்கு சொல்ல வருவது இதைத்தான்வெறும் குழந்தைகளின் உலகம் பற்றி பேசுவதோடு நில்லாமல்  உலகம் முழுக்க மனித நேயம் வற்றிப்போய் இனம் மொழி மத வேற்றுமைகள் அதிகரித்துவிட்டதும்   குழந்தைகளின்   மீது  நாடுகள் தொடுக்கும்  வன்முறையும் ,  இயற்கையை அழித்தொழிக்கும்  மனிதனின் சுய நலமும்  என பல முனைகளில் கொரானாவுக்கான காரணங்களை அலசுகிறது தாஜ்நூர் இசையில் ரமேஷ் வைத்யா வரிகளில் உருவான  இப்பாடல் என்கிறார் இயக்குனர் அஜயன் பாலா.