பவன் கல்யாண் ஜோடியானார் நிதிஅகர்வால்!

தமிழில், பூமி, ஈஸ்வரன் படங்களில் நடித்த நிதி அகர்வால்,தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதியுடன் ஜோடி சேர்ந்துபுதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் பான் இந்தியா படமாக, வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் புதிய படம் ஒன்றில் ,தெலுங்கு ஹீரோ பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார்.க்ரிஷ் இயக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது, நிதி அகர்வால் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.