முந்தானை முடிச்சு-2 : புதிய அறிவிப்பு வெளியானது !
கடந்த 1983ம் ஆண்டு பாக்யராஜ், ஊர்வசி, ஆகியோரது நடிப்பில் வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த இந்த படத்தை பாக்யராஜ் கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். வர்த்தக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும், பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட் ட பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில் கிட்டத்தட்ட 37 வருடங்களுக்கு பின் அந்த படத்தை மீண்டும் தமிழிலேயே ரீமேக் செய்ய முடிவு செய்து ‘முந்தானை முடிச்சு-2’ உருவாக உள்ளதாகவும் இதில், சசிகுமார் நாயகனாகவும்,ஐஸ்வர்யாராஜேஷ் நாயகியாகவும் நடிக்க பாக்யராஜ் இன்றைய காலகட்டத்துக்கு தகுந்த மாதிரி திரைக்கதையை மாற்றியுள்ளதாகவும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தனர்.
ஆனால் இப்பட த்தை இயக்குவது யார் என்பதை மட்டும் வெளியிடாமல் மவுனம் காத்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு சசிகுமார் தயாரித்து நடித்த ’சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர் பிரபாகரன் இப்படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சசிகுமார் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ’கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தினை எஸ்.ஆர் பிரபாகரன்தான் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. JSB film studios நிறுவனம் சார்பாக JSB சதீஷ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது