அமானுஷ்ய ஆய்வாளராக நடிக்கும் கவுதம்மேனன்!

பெம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக டி. ஜீவதா கிஷோர் தயாரித்து வரும் புதிய படத்துக்கு “3.33” என வித்தியாசமான தலைப்பிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் திகிலூட்டும் ஹாரர் திரில்லராக உருவாகும் இப் படத்தில் நடன இயக்குனர் சாண்டி கதாநாயகனாக நடிக்கிறார்.
இயக்குனர் கவுதம் மேனன் அமானுஷ்ய ஆய்வாளராக முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.இவர்களுடன், புதுமுகம் ஸ்ருதி,ரமா,மைம் கோபி,ரேஷ்மா (பிக்பாஸ்),சரவணன் (பருத்தி வீரன்)உல்ப்ட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இப்படம் குறித்து இயக்குனர் நம்பிக்கை சந்துரு கூறுகையில்,”இயக்குனர் கவுதம் மேனனின் வரவு இப் படத்தின் தரத்தை மேலும் அதிகரித்துள்ளது. அவருடன் பணியாற்றியது மறக்கமுடியாத நிகழ்வு.கடந்த மாதம் இப்படத்தின் நாயகன் சாண்டி இருக்கும் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டோம், தற்போது இயக்குனர் கவுதம் மேனனின் பிறந்த நாளன்று அவர்இடம் பெற்றுள்ள இரண்டாம் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளோம்.’ என்கிறார்.தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தின் ஒளிப்பதிவை சதிஷ் மனோகரன் கவனிக்க,ஹர்ஷவர்தன் இசையமைத்து வருகிறார்.,