ரகசிய போலீஸ் ஏஜெண்டாக நடிக்கும் விஜய்!

மாஸ்டர் படத்தைத்தொடர்ந்து நடிகர் விஜய் , சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். விஜய்யின் 65-வது படமாக உரு வாகும் இப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இதில் ரகசிய போலீஸ் ஏஜெண்டாக நடிக்கும் நடிகர் விஜய்யின் சண்டைக்காட்சிகள் கேஜிஎப் படத்தை மிஞ்சும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம். அன்பறிவு சகோதரர்கள் இப்படத்திற்கான சண்டைக்காட்சிகளை அமைத்து வருகின்றனராம்.