வரிசி என்றால் என்ன அருத்தம்?

படத்தில் பங்கேற்றவர்கள் அனைவருமே புதியவர்கள். அறிமுகங்கள். 
ஆனால் வித்தியாசமான சிந்தனையாளர்கள். கதியில் புதுமை இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள். ஆனால் கொடுப்பதை புதிதாக கொடுத்துவிடுகிறார்கள். பலதுறை வித்தகர்கள். 
அதனால்தான் தங்களின் படைப்புக்கு வரிசி என டைட்டில்.!
தமிழ் தெரிந்தவர்களே அகராதியைத் தேடவேண்டும். இதற்கு தூண்டில் என பெயரிட்டிருக்க வேண்டும் ,ஏனென்றால் வரிசிக்கு  தூண்டில் என்பது மீனவர்கள் மட்டுமே தெரிந்திருக்கிற பொருள். 

கார்த்திக் தாஸ் அவர்களின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியாகவிருக்கும் இத்திரைப்படம் பல கலைஞர்களின் திரை கனவை நினைவாக்கும் பெரும் முயற்சி. இத்திரைப்படத்தில் பணியாற்றியிருக்கும் பல கலைஞர்களுக்கு இதுவே முதல் திரைப்படம்.

வரிசி என்றால் என்னவென கேட்டதற்கு வரிசி என்றால் மீனவர்கள் மொழியில் தூண்டில் என்று கார்த்திக் தாஸ் கூறினார். இத்திரைப்படம் காதல், நட்பு, நகைச்சுவை, திகிலென பல்சுவைகளின் விருந்தாகவிருக்கும். மேலும் சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் அவலங்களை பற்றியும் வலுவாக பேசும்.என்கிறார்கள். இந்த படத்தின் இசை,முன்னோட்டம் எளிமையுடன் நடந்தது.